பொங்கல் பரிசு ரூ. 2,500 /- உங்கள் பெயர் இருக்கிறதா? ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

தமிழகத்தில் நாளை முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், குடும்பத்துக்கு ரூ.2,500 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் பழனிசாமி கடந்த மாதம் தனது தேர்தல் பரப்புரையின் போது அறிவித்தார்.

இதனையடுத்து, பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன்கள் அவரவர் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட்டது.

4TH  முதல் இம்மாதம் 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, ஒருநாளை முற்பகல் 100 பேர், பிற்பகல் 100 பேர் என பிரித்து பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. எனவே, குடும்ப அட்டைத் தாரர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் பரிசுத் தொகையை பெற வேண்டிய நாள், நேரம் ஆகியவையும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, 4-ந் தேதிக்குரிய டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே நாளை பொருட்களை வாங்க முடியும். முற்பகலில் பொருட்களை வாங்க முடியாத நபர்கள் பிற்பகலில் தங்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், டோக்கனில் குறிப்பட்ட நாள் படி பொருட்கள் வாங்க முடியாவிட்டால், கடைசி நாளான 13-ந்தேதி சென்று வாங்கி கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

            TOLL FREE :044-2766240

விடுபட்டவா்களுக்கு வரும் 13 TO 19-ஆம் தேதியன்று அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments