சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் சர்க்கரை பெறும் ரேஷன் அட்டைதாரர்களாக இருந்தால் அவர்கள் தங்கள் அட்டைகளை அரசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உணவுத்துறை காமராஜ் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரேஷன் அட்டை:
மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்களால் ரேஷன் கடைகளில் நாடு முழுவதும் மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட்ட பல சரக்குப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதற்காக மக்களுக்கு ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சர்க்கரை அட்டை என்று ஒன்று உள்ளது. இந்த அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினர் அரசு இலவசமாக வழங்கும் அரசியினை வாங்கிக் கொள்ள முடியாது.
தமிழகத்தில் மொத்தம் 5,80,298 அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன. இவர்களில் பலரும் தங்களது அட்டைகளை அரசி அட்டைகளாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்ததால் தற்போது தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சரான காமராஜ் ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளார். செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "தமிழகத்தில் சர்க்கரை அட்டை வைத்திருப்போரில் பெரும்பாலானோர் அரசி அட்டைகளாக தங்களது அட்டைகளை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்".
"இதனை அடுத்து சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது அட்டைகளை தகுதியின் அடைப்படையில் அரிசி அட்டைகளாக மாற்ற வேண்டும் என்றால் தங்களது குடும்ப அட்டையின் நகலை எடுத்து www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம். அதனை இன்று முதல் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய கடைசி நாள் 20 ஆம் தேதி ஆகும். இணையதள முகவரியில் அனுப்ப முடியாதவர்கள் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையரிடம் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் நபர்களின் அட்டை தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து தரப்படும்" இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகையை எப்படி வகையைக் கண்டறிவது:
0 Comments