ITI admission 2020 tamil | தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை - 2020

 தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை - 2020

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகத்தில், 2020-2021 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 7 மண்டலங்களில் உள்ள 32 இடங்களில், மாவட்ட கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற, திறனை மேம்படுத்த, வேலைவாய்ப்பை பெற, உலகை இயக்க, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த தொழிற்பயிற்சியில் நடத்தப்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில், இளைஞர்கள் சேர்ந்து தங்களது திறனை மேம்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.




முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பம் தேதி: 16/08/2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15/09/2020

கலந்தாய்வு நடைபெறும் தேதி, இடம், நேரம் ஆகிய விவரங்கள் இதே இணையதளத்தில்  வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ.50

பயிற்சி காலம்:

ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட கால பயிற்சிகள்

பயிற்சி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் துவங்கும். பயிற்சி முடிவில் அனைத்து ஆண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற்சான்றுகள் (NTC) வழங்கப்படும்.


பயிற்சிக்கட்டண விவரம்:

1. பயிற்சிக்கட்டணம் (Tuition Fee) - ஏதுமில்லை

2. காப்புத் தொகை (Caution Deposit) - ரூ.100 (பயிற்சியின் முடிவில் திரும்ப வழங்கப்படும்)

3. விளையாட்டுப்போட்டிகள் தொடர்பான கட்டணம் (Sports Fee) - ரூ.10

4. பதிவுக் கட்டணம் (Registration Fee) - ரூ.25

5. 8,10 ஆம் வகுப்பு மதிப்பெண் சரிபார்க்கும் கட்டணம் (Certificate Verification Fee) - ரூ.50 (தலா ஒரு சான்றிதழுக்கு)

வயது வரம்பு:

1. பொது பிரிவினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / மாற்றுத்திறனாளிகள் - 14 முதல் 40 வயது வரை

2. முன்னாள் ராணுவத்தினர் - 14 முதல் 45 வயது வரை

3. போரில் இறந்த ராணுவ வீரரின் மனைவி / விதவை / கணவனால் கைவிடப்பட்டோர் / மகளிர் - குறைந்தபட்ச வயது 14, வயது உச்சவரம்பு இல்லை.


மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் வழங்கப்படும் சலுகைகள்: 

(அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மட்டும்)


1. உதவித்தொகை ரூ.500 - மாதந்தோறும் (வருகை நாட்களுக்கேற்ப)

2. விலையில்லா பேருந்து கட்டண சலுகை

3. விலையில்லா மிதிவண்டி

4. விலையில்லா மடிக்கணினி

5. விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைப்படக் கருவிகள்

6. விலையில்லா சீருடை - ஒரு செட்

7. விலையில்லா காலணி - ஒரு செட்


தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கான பயிற்சிக்கட்டணத்தை அரசே செலுத்துகிறது. 

1. நகரப்பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10,000 - வீதம் பயிற்சிக்கட்டணம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்.

2. ஊரகப்பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.12,000 - வீதம் பயிற்சிக்கட்டணம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

குறைந்த பட்ச கல்வித்தகுதி, பள்ளிகளில் முறையாக பயின்று, 8ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12 வகுப்பில் தேர்ச்சி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


குறிப்பு:

1. 8ஆம் வகுப்பு தேர்ச்சி - குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு மட்டுமே, இந்த கல்வித்தகுதி உள்ளது.

2. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி - குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு மட்டுமே, இந்த கல்வித்தகுதி உள்ளது.

3. 8 வகுப்பு / 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தரவரிசை நிர்ணயிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், http://skilltraining.tn.gov.in/DET/ -என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

MOBILE NUMBER : 9499055612

WHATSAPP NUMBER : 9499055618

E-MAIL :onlineitiadmission@gmail.com


குறிப்பு:

ஒரு மாணவர் பல மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி இணையதள விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும். 

  1. Name of the Candidate (விண்ணப்பதாரரின் பெயர்).
  2. E-mail id (மின்னஞ்சல் முகவரி).
  3. Mobile No. (அலைபேசி எண்).
  4. Date of Birth (பிறந்த தேதி).
  5. Community / Caste details. (வகுப்பு / சாதி விவரங்கள் (ST/SCA/SC/MBC/DNT/BCM/BC).
  6. Aadhar No. (ஆதார் எண்.).
  7. Priority Reservation (முன்னுரிமை இடஒதுக்கீடு).
    • a. Ex-servicemen / Ex-servicemen ward (முன்னாள் இராணுவத்தினர் / முன்னாள் இராணுவ வீரரின் மகன் / மகள்).
    • b. Differently abled Person (மாற்றுத்திறனாளிகள்) .
    • c. State level sports winner (மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் முதலிடம் பெற்றோர்).
    • d. Orphan / ஆதரவற்றோர்.
  8. Details for paying application fee through online payment gateway. (இணையவழியாக விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கு தேவையான விவரங்கள் (Debit cart / credit Card / Gpay / Net banking).
  9. கீழ்க்காணும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பொருட்டு scan செய்து JPEG வடிவில் வைத்துக்கொள்ளவும்.
    • a. 8th / 10th Mark sheet (எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
    • b. Transfer Certificate /மாற்றுச்சான்றிதழ்.
    • c. Community Certificate / சாதிச்சான்றிதழ்.
    • d. Priority Reservation Certificate / முன்னுரிமை இடஒதுக்கீட்டிற்கான ஆவணம்.
  10. Passport size photo & signature ஆகிய ஆவணங்களை Scan செய்து JPG வடிவத்தில் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாக படிக்கவும் .

  • விளக்க கையேட்டினை (Prospectus) கவனமாக படித்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வது எப்படி என்பது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வீடியோ மற்றும் கையேட்டினை கவனமாக பார்வையிட்டு அதன்பின் பூர்த்தி செய்யவும் .
  • "*" குறியிட்டுள்ள அனைத்துப் பதிவுகளையும் கண்டிப்பாக பூர்த்தி செய்யவேண்டும்
  • அனைத்து அசல் சான்றிதழ்களும் சேர்க்கையின் போது தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்கத் தயாராக வைத்திருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் இல்லாத பட்சத்தில் சேர்க்கைக்கு தகுதியற்றவராக கருதப்படுவர்.
  • பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து தகவல்களின் உண்மைத் தன்மைக்கு விண்ணப்பதாரரே முழு பொறுப்பாவார்.
  • பூர்த்தி செய்த விவரங்கள் தவறு என்று தெரியவரும் போது தங்களுடைய விண்ணப்பம் எந்த நிலையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

1 Comments