Amazon Work From home job

இந்தியாவில் உள்ள முன்னணி ஆன்லைன் ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா, 20,000 பருவகால ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.





இது ஹைத்ராபாத், புனே, கோயமுத்தூர், நொய்டா, இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, சண்டிகர், மங்களூர், போபால், லக்னோ உள்ளிட்ட 11 நகரங்களில் இந்த பணியமர்த்தல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அமேசான் வளர்ச்சி முன்னதாக நாட்டில் 50,000 தற்காலிக வேலைகளை அறிவித்த அமேசான், அதன் பிறகு தற்போது இந்த வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் இவ்வாறு பணியமர்த்தப்படும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் Virtual Customer Service திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பர். இதனால் வீட்டில் இருந்து வேலை பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கும் இதில் வாய்ப்புகள் உண்டு.

தகுதி என்ன? 
    
சரி இந்த வேலைக்கு தகுதி என்ன? அமேசானின் இந்த பருவகால பணியமர்த்தலுக்கு 12ம் வகுப்பு முடித்திருந்தால் கூட போதும் என்கிறது அமேசான். எனினும் ஊழியர்கள் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழில்களில் ஒன்றினை சரளமாக பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

எவ்வளவு சம்பாதிக்க முடியும்? 

  இந்த அதிரடியான வேலை வாய்ப்பின் மூலம் மாதம் 15,000 முதல் 20,000 ரூபாய் வரையில் சம்பாதிக்க முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தற்காலிக வேலை என்று கூறப்படும் நிலையில் 6 மாத காலம் வரையில் இதற்கு அவகாசம் வழங்கப்படும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்ன வேலை? 

  இவ்வாறு பணியில் அமரும் ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சமூகத்தில் இருந்து வரும் போன் கால் மற்றும் மெயில்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் தற்காலிக பணிகளாக இருந்தாலும்., அவர்களின் திறமை மற்றும் வணிகத் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில பதவிகளை நிரந்தரமாக்க கூடும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

எப்படி விண்ணபிப்பது?

    இவ்வாறு வேலைக்கு விண்ணபிக்க 1800-208-9900 என்ற எண்ணிக்கு அழைத்து விவரங்களை கூறலாம். அல்லது seasonalhiringindia@amazon.com என்ற மெயில் ஐடி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது. எது எப்படியோங்க கொரோனாவினால் பணியிழந்தவர்களூக்கு இது ஒரு தற்காலிக வாய்ப்பாக அமையும்..

Post a Comment

0 Comments