கூகிளின் புதிய இமேஜ்-ஜெனரேஷன் AI கருவியான நானோ பனானா ப்ரோ அறிமுகத்திலிருந்து உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சாதாரண ஃபில்டர்கள், ஸ்டைல் எஃபெக்டுகள், மிகவும் பழைய, சேதமடைந்த, மங்கிய புகைப்படங்களை HD படங்களாக மாற்றும் அசாதாரண திறன் இதில் உள்ளது. இதற்கு சக்தி அளிப்பது Google-ன் Gemini 3 Pro AI மாடல்; இது முந்தையதை விட மிகுந்த மல்டிமாடல் செயல்திறன் கொண்டதாகும்.
பழைய படங்களை புதுப்பிக்கும் தொழில்நுட்பம்
பழைய படங்களில் பெரும்பாலும் மஞ்சள் நிறம், கீறல்கள், குறைந்த ரெசல்யூஷன், கிழிந்த ஓரங்கள் போன்ற பிரச்சினைகள் இருக்கும். நானோ பனானா ப்ரோ இவற்றை அனைத்தையும் அறிந்து, டெக்ஸ்ச்சர், நிழல், நிற சமநிலை ஆகியவற்றை மீட்டெடுத்து, படத்தை புத்தம் புதிய HD புகைப்படமாக மாற்றுகிறது. இதனால் பல பயனர்கள் சமூக ஊடகங்களில் "முன்-பின்" படங்களை பகிர்ந்து பெருமைப்படுகிறார்கள்.
நானோ பனானா ப்ரோவின் ரகசியம்
இந்த கருவி புகைப்படத்தின் மிகச் சிறிய பகுதிகளையே கவனித்து இழந்த விவரங்களை மீண்டும் உருவாக்கும் திறன் கொண்டது. மங்கிய முக அமைப்பு, சுருக்கங்கள், சேதமடைந்த பின்புலம் போன்றவற்றை கண்டறிந்து இயற்கையான நிறத்திலும், உண்மையான தோற்றத்திலும் புதுப்பிக்கப்படுகிறது. இதுவே இதன் வித்தியாசம். பழைய படங்களை சரிசெய்ய, பயனர்கள் AI க்கு தெளிவான பிராம்ப்ட்களை அளித்தால் போதும்.
உதரணமாக பின்வருமாறு Dust & scratches remove, Vintage photo restore, Color correct, Face details enhance பிராம்ப்ட்களை கொடுக்கலாம். நானோ பனானா ப்ரோ இதை உடனடியாக புரிந்து செயல்படுத்துகிறது. இதனால் எந்த தொழில்நுட்பத்தையும் அறியாத பொதுப் பயனர்களும் தங்கள் குடும்ப புகைப்படங்களை எளிதாகச் சரிசெய்ய முடிகிறது.
நானோ பனானாவில் பயன்படுத்த கூடிய சிறந்த பிராம்ப்ட்கள்
Prompt 1:
Restore the photo in full HD quality.
Prompt 2:
Rebuild the torn edges and missing portions to create a fully restored, complete image.
Prompt 3:
Remove mold spots, heavy scratches, and emulsion damage to produce a clean and clear photo.
Prompt 4:
Enhance facial clarity, eye definition, and natural skin texture while keeping the look realistic.
Prompt 5:
Colorize this black-and-white photo with historically accurate tones while preserving natural skin shades.
எளிமையாக பயன்படுத்தலாம் - Google Gemini போதும்
பயனர்கள் Google Gemini இல் தங்கள் பழைய புகைப்படத்தை பதிவேற்றி, மேலே கொடுத்த வரிகளை பயன்படுத்தினால் போதும். சில வினாடிகளில் மங்கிய, சேதமடைந்த, கிழிந்த புகைப்படங்கள் புதிய HD தரத்தில் மாற்றலாம்
0 Comments