LPG Gas Cylinder Latest Update: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான விதிகளில் (LPG Gas Cylinder New Rules) ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது சிலிண்டர் முன்பதிவு செய்வது முதல் அதனைப் பெறுவது வரை புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அனைத்து நுகர்வோரும் இ-கேஒய்சி (e-KYC) கட்டாயம் செய்ய வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு ஏஜென்சிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளன. அதன் விவரங்களை பார்ப்போம்.
இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம்:
சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்புவதற்கு (Refilling) ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி மற்றும் ஓடிபி (OTP) முறை இப்போது கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நுகர்வோருக்கும் இ-கேஒய்சி கட்டாயம் என்று எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு ஏஜென்சிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
இதனுடன், நுகர்வோர் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் நேரத்தில் ஒரு முறை கடவுச்சொல்லை (One Time Password - OTP) வழங்க வேண்டும். நுகர்வோர் டெலிவரிக்கான ஓடிபியை வழங்கவில்லை என்றால், அவர்களுக்கு சிலிண்டர் வழங்கப்படாது.
உணவுத் துறையின் உத்தரவு என்ன?
உணவுத் துறையின் (Food Department) கூற்றுப்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நுகர்வோர் இ-கேஒய்சியைப் புதுப்பிக்க ஊக்குவிக்கப்பட்து வருகின்றனர். ஆனால் அதன் தாக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. இதுவரை சுமார் 60 முதல் 65 சதவீதம் நுகர்வோர் மட்டுமே இ-கேஒய்சியைப் புதுப்பித்துள்ளனர்.
இதனால் சிலிண்டர் நிரப்புவதில் வெளிப்படைத்தன்மை (Transparency) இன்னும் முழுமை அடையவில்லை. எனவே தற்போது எரிவாயு சிலிண்டர் விநியோகம் விதிகள் கடுமையாக அமல்படுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
ஓடிபி அடிப்படையிலான விநியோக முறை நடைமுறைக்கு வருவதால், எதிர்காலத்தில் எரிவாயு கள்ளச் சந்தைப்படுத்துதல் (Black Marketing) மற்றும் போலி முன்பதிவு ஆகியவை முழுமையாகத் தடுக்கப்படும். இதன் காரணமாகவே எரிவாயு சிலிண்டர் விநியோகம் விதி தற்போது கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
எரிவாயு விநியோகஸ்தர்களின் வேண்டுகோள் என்ன?
- எரிவாயு விநியோகஸ்தர்கள் அனைத்து நுகர்வோர்களுக்கும் விரைவில் இ-கேஒய்சியைப் புதுப்பிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெறும் நேரத்தில் டெலிவரி செய்பவரிடம் ஓடிபியை அவசியம் வழங்க வேண்டும்.
- இந்த ஓடிபி என்பது சிலிண்டர் முன்பதிவு செய்யும்போதே நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும்.
- கேஒய்சி புதுப்பிக்காத நுகர்வோர், சிலிண்டர் நிரப்புவதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, விரைவில் சம்பந்தப்பட்ட எரிவாயு ஏஜென்சியைத் தொடர்புகொண்டு புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

0 Comments