வீட்டிலிருந்தே குறைந்த முதலீட்டில் நர்சரி தொழில் தொடங்குவது குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது. செடிகளின் தேவை, ஆன்லைன் மார்க்கெட்டிங் உத்திகள், மற்றும் கூடுதல் வருமான வழிகள் போன்றவற்றை இது உள்ளடக்கியுள்ளது.
இன்றைய காலத்தில் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தொழில் தேடுபவர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள், குடும்பச் சூழலில் சமநிலை காப்பாற்றிக் கொண்டே வருமானம் பார்க்க வேண்டும் என்பதால், அதிக நேரம், பெரிய மூலதனம், கனரக கருவிகள் தேவைப்படாத தொழில்களை விரும்புகின்றனர். அப்படிப் பட்டவர்களுக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய மிகவும் பாதுகாப்பானவும், போக போக மதிப்பு அதிகரிக்கும் தொழிலாக நர்சரி தாவர வளர்ப்பு மெல்ல மெல்ல ட்ரெண்டாகி வருகிறது. செடிகள் மீது ஆர்வம் இருந்தாலே போதும்; பால்கனியில் இருந்தே கூட இந்த பிஸினஸை தொடங்கிக்கொள்ளலாம்.
வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ரசாயனமில்லா காய்கறிகள் போன்ற விஷயங்களில் மக்கள் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அதிகமாக செடிகள் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. திருமணங்கள், விழாக்கள், கடை திறப்பு நிகழ்ச்சிகளில் பரிசாக மரக்கன்றுகளை வழங்கும் நடைமுறையும் சாதாரணமாகிவிட்டது. இதனால் செடி விற்பனைக்கு நகரப்பகுதிகளில் மிக அதிகமான தேவை உருவாகியுள்ளது. சிறிய இடமே இருந்தாலும் செடிகளை மெல்ல மெல்ல பெருக்கிக் கொண்டு போனால் நல்ல வருமானம் பெற முடியும்.
இந்த தொழிலின் சிறப்பம்சம்,செடிகள் வளரும்போது அதின் விலை கூடும். இன்று நாற்றாக இருந்த ஒன்று இரண்டு மாதத்தில் மலர்க்கச் செடியாக மாறும்போது அதன் விற்பனை மதிப்பும் உயர்கிறது. விற்கப்படவில்லை என்று கவலைப்பட தேவையில்லை. செடிகள் வளர்வது லாபமே.
தொடக்கத்தில் 100 சதுர அடி இடத்தில், பாலித்தீன் கவர், மண் தொட்டி, தேங்காய் நார், தொழு உரம், நீர் ஊற்றும் கருவி போன்ற எளிய பொருட்களுடன் ஏறக்குறைய ரூ.5,000-ல் தொழிலை ஆரம்பிக்கலாம். அனுபவம் வந்தபின் அதிக வகை செடிகள், நிழல் வலை போன்றவை சேர்த்துக்கொண்டு லாபத்தை மேலும் உயர்த்தலாம்.
செடிகளை விவசாயிகள், அருகிலுள்ள நர்சரிகள் அல்லது மொத்த விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி வளர்க்கலாம். முதலில் சில மாதங்கள் சோதனை செய்து எந்த செடிகள் நம் பகுதியில் நன்றாக வளருகின்றன என்பதை கவனித்துப் பிறகு அவற்றையே அதிகமாக வளர்ப்பது நல்லது.
காய்கறி, பூச்செடி, மருந்து மூலிகை, காற்றைச் சுத்தம் செய்யும் இண்டோர் பிளான்ட்ஸ், வாஸ்து செடிகள் என பல வகை வைத்தால் வாடிக்கையாளர் ரீச் அதிகரிக்கும். வாட்ஸ்அப் குழுக்கள், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மார்க்கெட்டில் படங்களை பகிர்ந்து விற்பனை செய்யலாம். அக்கம் பக்கம், நண்பர்கள், உறவினர்கள் முதல் வாடிக்கையாளர்களாக இருக்கலாம்
இதைத் தொடர்ந்து கூடுதல் வருமானமாக, செடிகள் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள், வீடுகளுக்கு நேரடி செடி ஆலோசனை, தோட்ட அமைப்பு வழிகாட்டுதல் போன்ற சேவைகளும் வழங்கலாம். ஆனால் பராமரிப்பு முக்கியம்: உப்புத்தன்மை குறைந்த தண்ணீர் பயன்படுத்த வேண்டும், மண் தொட்டிகளில் தண்ணீர் வெளியேறும் துளைகள் இருக்க வேண்டும், வாரத்தில் ஒருமுறை வேப்பெண்ணெய் கலந்த நீர் ஸ்ப்ரே செய்தால் பூச்சிகள் தடுக்கப்படும். மழை, கடும் வெப்பம் போன்ற காலங்களில் கூடுதல் கவனிப்பும் அவசியம்.
சிறிய இடத்தை, சிறிய முதலீட்டை, பெரிய வாய்ப்பாக மாற்ற முடியும் இந்த நர்சரி தொழில், பெண்களுக்கு வருமானத்துடன் மன அமைதியும் படைப்புத் திறனும் தரும் துறையாக மாறி வருகிறது. செடிகளை வளர்ப்பது பொழுதுபோக்குக்கு மட்டும் அல்ல, உங்களுக்கான அடையாளமான தொழிலாகவும் மாறிவிடும். ஆர்வத்துடன் தொடங்குங்கள்,இயற்கை உங்களுக்கு வருமானம் கொடுக்கும்! 5 ஆயிரம் முதலீட்டில் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கும் சூப்பர் தொழில்.! பெண்களே களத்தில் இறங்கி கலக்கலாம் வாங்க.!
.jpg)
0 Comments