மத்திய சுகாதாரத்துறையின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.
இங்கு பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும். இந்த பணியிடங்களை நேரடியாக மத்திய அரசு நிரப்பி வருகிறது. இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
AIIMS Recruitment: பணி குறித்த விவரம்
எய்ம்ஸ் மருத்துவமனையில் 1,353 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு துறையில் வேலை செய்யும் விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். உதவி நிர்வாக அதிகாரி, உதவி நிர்வாக உதவியாளர், கிளார்க், ஜூனியர் எஞ்சினியர், கேஷியர், ஜூனியர் அக்கவுண்ட் ஆபிசர், லேப் அசிஸ்டண்ட், ஓட்டுநர், ரிசப்ஷனிஸ்ட், ஜூனியர் வார்டன், ஹவுஸ் கீப்பர், உதவி ஸ்டோர் அதிகாரி, மருத்துவமனை நிர்வாகி, நூலக ஆசிரியர், கண் டெக்னீஷியன், பல் டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. நிர்வாக ரீதியாகவும் சில பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
AIIMS Recruitment: கல்வித்தகுதி
மேற்கண்ட பணியிடங்களுக்கு வயது வரம்பு என்பது அந்தந்த பணிக்கு ஏற்ப மாறுபடும். பொதுமாக பார்க்கையில், மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வித்தகுதியும் அந்தந்த பணிகளுக்கு ஏற்ப மாறுபடும். பொதுவாக பார்க்கும்போது, நிர்வாக பணிகளை தவிர்த்து, மற்ற அனைத்து பணிகளுக்கு கல்வித்தகுதி என்பது 10,12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். வையர்மேன், ஓட்டுநர், ஹவுஸ் கீப்பர், உதவி ஸ்டோர் அதிகாரி, உதவி நிர்வாக உதவியாளர் போன்ற பணிகளுககு 10,12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.
AIIMS Recruitment: வயது விவரம்
மேற்கண்ட பணியிடங்களுக்கு வயது வரம்பு என்பது அந்தந்த பணிக்கு ஏற்ப மாறுபடும். இருப்பினும், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசு விதிகளின்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AIIMS Recruitment: சம்பள விவரம்
மேற்கண்ட பணிக்களுக்கான சம்பளத்தை பொறுத்தவரை, அந்தந்த பணிகளுக்கு ஏற்ப மாறுபடும். அதிகபட்ச சம்பளமாக ரூ.1,51,00 வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
AIIMS Recruitment: பணிக்கு எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்
எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மேற்கண்ட காலிப் பணியிடங்களுக்கு கணினி வழியில் தேர்வு நடைபெறும். இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், பணிக்கு அமர்தப்படுவார்கள். இதற்கான தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும். இதற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AIIMSRecruitment: விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிகளுக்கு AIIMExams.Ac.In என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படடுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கு கட்டணமாக ரூ.3,000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பட்டியலின, பழங்குடி, மாற்றுத்திறனாளிகள் தேர்வு கட்டணமாக ரூ.2,400 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம். இதற்காக விண்ணப்பம் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
0 Comments