உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலியை ஏராளமான மக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். ஒரு நபரின் செல்போன் எண் தெரிந்திருந்தால் மட்டுமே வாட்ஸப் மூலம் அவரை தொடர்பு கொண்டு உரையாட முடியும்.
இதனால் தனிப்பட்ட எண்களை பகிர வேண்டிய சூழல் இருந்தது. தற்போது வாட்ஸ் அப் செயலியில் செல்போன் எண்ணை பகிராமலேயே மற்றவர்களை தொடர்பு கொள்ளும் வகையில் புதிய அப்டேட் அறிமுகமாக உள்ளது.
இன்ஸ்டாகிராமில் இருப்பது போல வாட்ஸ் அப் பயனர் பெயர் மூலம் ஒருவர் மற்றொருவரை தொடர்பு கொண்டு உரையாடலாம். ஆனால் Username உருவாக்குவதில் கட்டுப்பாடுகள் உண்டு. WWW எனத் தொடங்கும் Username உருவாக்க முடியாது. Username-ல் கட்டாயமாக எழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். அடிக்கோடுகள், எண்கள் போன்ற குறியீடுகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
Username உருவாக்கும் போதே ரகசிய எண்ணும் கொடுக்கப்படும். அந்த பயனர் பெயரும் ரகசிய எண்ணும் இருப்பவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்தி அனுப்ப முடியும். தேவையற்ற ஸ்பேம் செய்திகள், மோசடி குறுஞ்செய்திகள் ஆகியவற்றை இதன் மூலம் தவிர்க்கலாம். தற்போது இந்த அம்சம் பீட்டா சோதனையில் உள்ள நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments