இனி ஸ்மார்ட் கண்ணாடி மூலம் UPI பேமெண்ட்.. இது எப்படி வேலை செய்யும்? இதோ முழு விவரம்..

Follow Us

இனி ஸ்மார்ட் கண்ணாடி மூலம் UPI பேமெண்ட்.. இது எப்படி வேலை செய்யும்? இதோ முழு விவரம்..

 இந்தியாவில் பெரும்பாலான மக்கள் யுபிஐ (UPI) முறையில் தான் பணத்தை பரிமாற்றம் செய்து வருகின்றனர். அதுவும் சிறிய கிரமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் இந்த யுபிஐ சேவை ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

                                                                                


குறிப்பாக இந்த யுபிஐ செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும் முடியும், பெறவும் முடியும்.


அதேபோல் பல முன்னணி நிறுவனங்கள் ஸ்மார்ட் கண்ணாடிகளை(Smartglasses) அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக புகைப்படங்கள், க்களை பதிவு செய்யவும், செல்போன் நோட்பிகேஷன்களை வழங்கவும் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் பயன்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் யுபிஐ பணம் செலுத்தும் வசதியும் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது விரைவில் கண்ணாடியில் பார்த்தால் பணம் அனுப்பும் வசதி வர உள்ளது. இதற்கு செல்போன் பின் நம்பர் என எதுவும் தேவையில்லை என்று கூறப்படுகிறது. இது எப்படி செயல்படும் என்பதை குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.


பிரபல கண்ணாடி நிறுவனமான லென்ஸ்கார்ட் (Lenskart) விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் நேரடியாக க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து யுபிஐ பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும் என்று லென்ஸ்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதற்கு மொபைல் போன் அல்லது பின் நம்பர் தேவையில்லை என்று லென்ஸ்கார்ட் நிறுவனம் கூறப்பட்டுள்ளது. அதாவது லென்ஸ்கார்ட்டின் பி (B) கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் ஸ்மார்ட் கண்ணாடிகளில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் பணப் பரிவர்த்தனைகளை மிக எளிதாக மேற்கொள்ள முடியும் என லென்ஸ்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது.


மேலும் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளில் யுபிஐ பாதுகாப்பாக ஒருங்கிணைக்கப்படுகிறது. எனவே இதனால் பயனரின் வங்கிக் கணக்கும் பாதுகாப்பாக இருக்கும். பின்பு இது தொடர்பாக லென்ஸ்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது பணத்தை அனுப்ப மிகப் பெரியளவில் உதவும். ஒரு பொருளை வாங்கும் போது மொபைல்போனை எடுக்கவும் பின் நம்பரை பதிவிடவும் அவசியம் இருக்காது. ஸ்மார்ட் கண்ணாடிகள் உதவியுடன் எளிமையாகப் பணம் அனுப்ப முடியும். என்பிசிஐ-ன் யுபிஐ சர்க்கிள் அம்சம், ஸ்மார்ட் கண்ணாடிகளை நேரடியாக வங்கி கணக்குடன் இணைக்க உதவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


ஸ்மார்ட் கண்ணாடி மூலம் பணப் பரிவர்த்தனை செய்வது எப்படி?


நீங்கள் கடைக்கும் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பிறகு கட்டணம் செலுத்த அங்கு இருக்கும் க்யூ.ஆர் (QR) கோடை கேட்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த க்யூ.ஆர் கோடை பார்த்தாலே போதும். ஸ்மார்ட் கண்ணாடியில் இருக்கும் கேமரா க்யூ.ஆர் கோடை சுலபமாக ஸ்கேன் செய்துவிடும். அதன்பின்பு நீங்கள் வாய்ஸ் கமெண்ட், அதாவது குரல் கட்டளை மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பியூஷ் பன்சால் இது குறித்து கூறுகையில், வரும் காலங்களில் ஸ்மார்ட் கண்ணாடிகளின் பயன்கள் தொடர்ந்து அதிகரிக்கும். பின்பு பணப் பரிவர்த்தனைகள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். அதுவும் ஸ்மார்ட் கண்ணாடிகளின் கேமரா மூலம் பணம் செலுத்தும் வசதி நிச்சயம் பயனுள்ள வகையில் இருக்கும் என்று அவர் கூறினார்.


தற்போது ஸ்மார்ட் கண்ணாடிகள் பிரிவில் பல முன்னணி நிறுவனங்கள் சிறிய கேமராக்கள், மியூசிக் கேட்பதற்கான ஸ்பீக்கர்கள் அம்சங்களை மட்டுமே வழங்கி வருகின்றன. மெட்டா, கூகுள் போன்ற நிறுவனங்கள் கூட அணியக்கூடிய சாதனங்கள் மூலம் நேரடியாக டிஜிட்டல் பணம் செலுத்தும் வசதியை இன்னும் கண்டறியவில்லை. ஆனால் லென்ஸ்கார்ட்டின் இந்த புதிய அறிவிப்பு முன்னோடி முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments