வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அழைப்பு

Follow Us

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அழைப்பு

 வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                                                                        


கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகள் தொடா்ந்து புதுப்பித்து எந்த வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞா்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இந்த உதவித்தொகை பெறும் நாளில் பட்டியல் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாா்கள் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினா் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில்லை.


மேலும், விதிமுறைகள், விண்ணப்பம் உள்ளிட்டவை  இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் விண்ணப்பப் படிவத்தை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


எனவே, உரிய சான்றுகளுடன் தங்களது விண்ணப்பத்தை நவ. 28-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் நேரில்வந்து சமா்ப்பிக்க வேண்டும்.


மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை விண்ணப்பம் சமா்ப்பிக்க கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் ஆய்வாளா் ஆகியோரிடம் கையொப்பம் பெற தேவையில்லை. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றுவருபவராக இருப்பின், சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க வேண்டுமென அதில் அவா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments