கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்காக மாவட்ட சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பணியிட விவரம்:
மருத்துவர் (ஹோமியோபதி) – 3
ஆயுர்வேத மருத்துவர் – 1
யுனானி மருத்துவர் – 1
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவர் – 5
சிகிச்சை உதவியாளர் – 4
மருந்தாளுநர், ஹோமியோபதி – 3
தரவு உதவியாளர் – 1
பல்நோக்கு ஊழியர் – 1
உதவியாளர் – 3
ULB-UHN – 48
கணக்கு உதவியாளர் – 1
டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் – 1
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். ULB-UHN, கணக்கு உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிகளுக்கு 35 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
மருத்துவர் (Doctor)
கல்வித் தகுதி: BHMS / BAMS / BUMS / BNYS போன்ற இந்திய மருத்துவப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சிகிச்சை உதவியாளர் (Therapist Assistant)
கல்வித் தகுதி: நர்சிங் தெரபிஸ்ட் டிப்ளமோ (Nursing Therapist Diploma).
மருந்தாளர் (Pharmacist)
கல்வித் தகுதி: ஹோமியோபதி பார்மசி டிப்ளமோ (Diploma in Pharmacy – Homoeopathy).
தரவு உதவியாளர் (Data Assistant)
கல்வித் தகுதி: கணினி அறிவியல் சார்ந்த துறையில் பட்டப்படிப்பு.
அனுபவம்: குறைந்தது 1 வருட அனுபவம் அவசியம்.
திறன்: தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு அறிவு தேவை.
பல்நோக்கு ஊழியர் / உதவியாளர் (Multipurpose Worker / Assistant)
கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி.
திறன்: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
ULB-UHN பணியிடம்
கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி.
சான்றிதழ்: 2 வருட ANM சான்றிதழ் (Auxiliary Nurse Midwifery).
கணக்கு உதவியாளர் (Accounts Assistant)
கல்வித் தகுதி: B.Com / M.Com முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: குறைந்தது 1 வருட பணி அனுபவம் அவசியம்.
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
திறன்: கணினி அறிவு அவசியம்.
சம்பளம்:
- மருத்துவர் பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம்.
- சிகிச்சை உதவியாளர், மருந்தாளுநர், தரவு உதவியாளர் பதவிகளுக்கு ரூ.15 ஆயிரம்.
- பல்நோக்கு ஊழியர் பதவிக்கு ரூ.8,500.
- உதவியாளர் பதவிக்கு ரூ.10 ஆயிரம்.
- ULB-UHN பதவிக்கு ரூ.14 ஆயிரம்.
- கணக்கு உதவியாளர் பதவிக்கு ரூ.16 ஆயிரம்.
- டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ரூ.13,500 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களின் இருந்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணியில் சேருபவர்கள் 11 மாதத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பிகும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை நிரப்பி தபால் மூலம் அனுப்பியோ அல்லது நேரடியாக சென்றோ விண்ணப்பிக்கலாம். 22.10.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் வந்து சேர வேண்டும்.
முகவரி
உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர் – 18.
0 Comments