தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி கல்வியில் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 11,916
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2025/10/17611186789617.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுபா வளாகம் எண்: 106F/7 தரைத்தளம், அன்னை நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பெரம்பலூர் - 621212
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2025

0 Comments