இனி அஞ்சல் நிலையத்தில் சிம்கார்டு வாங்க, ரீசார்ஜ் செய்ய அஞ்சல் நிலையம் செல்லலாம்!

Follow Us

இனி அஞ்சல் நிலையத்தில் சிம்கார்டு வாங்க, ரீசார்ஜ் செய்ய அஞ்சல் நிலையம் செல்லலாம்!

 இந்திய அஞ்சல் துறை தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது.

சிம் காா்டுகள் விற்பனை செய்ய, மொபைல் ரீசாா்ஜ் செய்ய இனி அஞ்சலகம் செல்லலாம்.


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் " இந்திய அஞ்சல் துறையின் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்களின் பரந்த விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, பிஎஸ்என்எல் சிம் காா்டுகளின் விற்பனை மற்றும் மொபைல் ரீசாா்ஜ் சேவைகளை இந்தியா முழுவதும் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்தியாவின் நகா்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பிஎஸ்என்எல்லின் இருப்பை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும். இணையதள இணைப்பு குறைவாக உள்ள, நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பிஎஸ்என்எல்-இன் தொலைத் தொடா்பு சேவைகள் எளிதாகவும் மலிவு விலையிலும் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments