பைக், ஸ்கூட்டி விலை அதிரடி குறைவு..! எந்த மாடலுக்கு எவ்வளவு தள்ளுபடி?

Follow Us

பைக், ஸ்கூட்டி விலை அதிரடி குறைவு..! எந்த மாடலுக்கு எவ்வளவு தள்ளுபடி?

 தீபாவளி பரிசாக GSTயில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளது.

குறிப்பாக இருசக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்ததன் விளைவாக யமஹா, டிவிஎஸ், ஹோண்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டிகளின் விலையை கணிசமாக குறைத்துள்ளன. இந்த புதிய விலை குறைப்பு, செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.


350சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.


பைக்குகள் விலை எவ்வளவு குறையும்?


யமஹா R15 - ரூ. 17,581 குறைய வாய்ப்பு

யமஹா MT-15 - ரூ. 14,964 குறைய வாய்ப்பு

யமஹா FZ சீரிஸ் - ரூ. 12,000-க்கு மேல் குறைய வாய்ப்பு

Aerox 155 - ரூ. 12,753 குறைய வாய்ப்பு

RayZR - ரூ. 7,759 குறைய வாய்ப்பு

Honda சிபி350 - ரூ. 18,887 குறைய வாய்ப்பு

Unicorn - ரூ. 9,948 குறைய வாய்ப்பு

ஆக்டிவா 125 - ரூ. 8,259 குறைய வாய்ப்பு

தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில், இந்த விலை குறைப்பு, வாகன விற்பனையை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நாட்களாக பைக் வாங்க திட்டமிட்டு, இந்த அறிவிப்புக்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள், தற்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த விலை குறைப்பு, இந்திய இருசக்கர வாகன துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

Post a Comment

0 Comments