இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது.
இதனால் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால் ஆதார் சேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையம் மூலமாக மக்கள் ஆதார் கார்டில் அப்டேட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆதார் கார்டில் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றம் செய்ய வசூலிக்கப்படும் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதனைப் போலவே பயோமெட்ரிக் மாற்றம் செய்ய கட்டணம் 100 ரூபாயிலிருந்து 125 ரூபாய்க்கு உயர்த்தப்படுகிறது. ஆனால் புது ஆதார் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டணம் இல்லை. இது முதல் கட்ட விலை ஏற்றம் என்றும் 2038 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments