தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை.. சூப்பர் சான்ஸ்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Follow Us

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை.. சூப்பர் சான்ஸ்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

                                                                             


பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு என்ன, சம்பளம் எவ்வளவு?, எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.


தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பபடுகிறது.


பணியிடங்கள் விவரம்:


அந்த வகையில் தற்போது புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.


புரொபேஷனரி அதிகாரி (Selected as a Senior Customer Service Executive (SCSE). மொத்தம் எத்தனை பணியிடங்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இந்த பணியிடத்திற்கான கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் கட்டாயம்.


வயது வரம்பு:


யுஜி டிகிரி முடித்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். முதுகலை பட்டம் பெற்றிருந்தால் 30 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.


ஊதியம் எவ்வளவு?


பயிற்சி திட்டத்தின் (Course Program) போது ஆண்டுக்கு ரூ. 3,56,000 சம்பளம் வழங்கப்படும்.


கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ 5 ஆயிரம் வழங்கப்படும்.


இண்டெர்ன்ஷிப் காலத்தில் மாதம் ரூ.24 ஆயிரம் வழங்கப்படும்.


பணி பயிற்சியின் போது மாதம் ரூ.48,000 கிடைக்கும்.


பணியிடம் ஒதுக்கப்பட்ட பிறகு ஆண்டுக்கு ரூ.8,64,000 சம்பளமாக கிடைக்கும்.


புரோகிராம் கட்டணமாக ரூ.2,80,000- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 36 மாதங்கள் நிறைவடைந்த பிறகு இதில் பாதியளவு கட்டணம் திருப்பி தரப்படும்.


தேர்வு முறை:


ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் https://tmb.manipalbfsi.com/sesc-program/ இணையதளத்தில் இந்த பயிற்சி திட்டம் குறித்த தெளிவான மற்றும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க வரும் 20.08.2025 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பை படிக்கhttps://www.tmbnet.in/tmb_careers/images/TMB%20UNext.jpg?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Post a Comment

0 Comments