மத்திய அரசு பிஎஃப் கணக்கு விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இனிமேல், புதிய பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) உருவாக்க முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கைரேகை அல்லது கண் விழி ஸ்கேன்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இப்போது முக அங்கீகாரம் மூலம் மட்டுமே ஆதார் சரிபார்ப்பு செய்யப்படும்.
'பிரதமர் விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா' போன்ற புதிய அரசுத் திட்டங்களில் மோசடிகளைத் தடுக்க இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் மூன்று கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்ற திட்டங்களில் நிதி மோசடிகள் நடந்ததால், இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments