இந்தியாவில் நிறைய காப்பீட்டுத் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா.
இதுவொரு அரசுத் திட்டமாகும். இதில் நீங்கள் 436 ரூபாய் மட்டுமே பிரீமியம் செலுத்தி ரூ. 2 லட்சம் வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இதுபோன்ற நேரத்தில், காப்பீட்டு பிரீமியங்களை பயனற்றதாகக் கருதுபவர்களுக்கு இந்தத் திட்டம் நல்ல திட்டமாக இருக்கும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் நன்மைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் காப்பீட்டு வசதியை வழங்குவதாகும். இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதில் நீங்கள் வெறும் 439 ரூபாய் ஆண்டு பிரீமியத்துடன் ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீட்டைப் பெறலாம். ஏழை மக்கள் கூட இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்து தங்கள் அன்புக்குரியவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட மக்கள் விண்ணப்பித்து காப்பீடு பெறலாம். காப்பீடு செய்யப்பட்டவரின் மரணத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினருக்கும், நாமினிக்கும் ரூ. 2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இறப்புக்கான காரணங்களில் இயற்கை மற்றும் விபத்து காரணங்கள் இரண்டும் அடங்கும். இதனுடன், ஏதேனும் நோயால் மரணம் ஏற்பட்டாலும் காப்பீட்டின் பலன் கிடைக்கும். இதுபோன்ற நிறைய நன்மைகள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கின்றன.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்துக்கு நீங்கள் எந்தவொரு அரசு வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த காப்பீடு குறைந்த செலவில் அதிகபட்ச நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது. அதுவும் மிகக் குறைந்த செலவில், உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கிறது. எனவே நீங்கள் காப்பீடு எடுக்கவில்லை என்றால் இந்த காப்பீட்டுத் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..
0 Comments