சுகாதாரத்துறையில் 45 காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க

Follow Us

சுகாதாரத்துறையில் 45 காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க

 சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு இருக்குங்க. 45 பணியிடங்களை நிரப்ப இருக்காங்க. எனவே உடனே அப்ளை பண்ணுங்க.

கடைசி தேதிக்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கு.

                                                                              



திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 45 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி போதும்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்று விரிவாக உங்களுக்காக.


திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 45 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


செவிலியர் (Staff Nurse)


காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,000


மருந்தாளுநர் (Pharmacist)


காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma in Pharmacy / Bachelor of Pharmacy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 32,000


சுகாதார ஆய்வாளர் (Health Inspector)


காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Multipurpose health worker course படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 14,000


ஆய்வக நுட்புனர் (Lab Technician)


காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma in Laboratory Technician படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 8,500


நகர்ப்புற சுகாதார செவிலியர் (Urban Health Nurse/ Auxiliary Nurse)


காலியிடங்களின் எண்ணிக்கை: 29

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ANM படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 14,000


பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multipurpose Hospital Worker)


காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 8,500


தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://forms.zohopublic.in/collrtnv/form/DistrictHealthSocietyTirunelveliNHM28072025/formperma/ddJi5YFiPDyVDt4MR0n8dC_BTWcikd3TQsabiAZykqw என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025 . இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. அதனால சீக்கிரம் அப்ளை பண்ணிடுங்க.

Post a Comment

0 Comments