விண்வெளி ஆய்வு துறையின் கீழ் செயல்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் தேவைக்கு ஏற்ப அவ்வபோது நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரில் அமைந்துள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தில் (LPSC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டெக்னிக்கல் அசிஸ்டண்ட், துணை அதிகாரி, டெக்னீஷியன், கனரக வாகன ஓட்டுநர், இலகுரக வாகன ஓட்டுநர் ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இஸ்ரோ பணியின் விவரங்கள்
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
டெக்னிக்கல் உதவியாளர் 12
துணை அதிகாரி 1
டெக்னீஷியன் 'B' 6
டிரைவர் 4
மொத்தம் 23
டெக்னிக்கல் உதவியாளர் பிரிவில் மெக்கானிக்கல் - 11, எலெக்ட்ரிக்கல் - 1 என்ற விதம் நிரப்பப்படுகிறது.
டெக்னீஷியன் பிரிவில் டர்னர் - 1, பிட்டர் - 4, ஏசி மெக்கானிக் - 1 என நிரப்பப்படுகிறது.
டிரைவர் பிரிவில் கனரக வாகன ஓட்டுநர் - 2, இலகுரக வாகன ஓட்டுநர் - 2 என நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
இஸ்ரோவில் LPSC-வில் உள்ள இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபடியாக அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு 35 ஆகும். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
டெக்னிக்கல் உதவியாளர் பதவிக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பொறியியல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
துணை அதிகாரி பதவிக்கு Leading Fireman/ DCO உடன் 6 வருட அனுபவம் மற்றும் துணை அதிகாரிக்கான சான்றிதழ் தேவை (அல்லது) / B.Sc உடன் PCM தகுதி பெற்று, துணை அதிகாரிக்கான சான்றிதழ் மற்றும் 2 ஆண்டு அனுபவம் தேவை. கூடுதலாக கனரக வாகன ஓட்டுநர் உரிமம், உடற்தகுதி அவசியம்.
டெக்னீஷியன் பதவிக்கு அந்தந்த தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
கனரக வாகன ஓட்டுநர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி, 5 ஆண்டுகள் அனுபவம் மற்றும் HVD ஓட்டுநர் உரிமம் தேவை.
இலகுரக வாகன ஓட்டுநர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி, 3 ஆண்டுகள் அனுபவம் மற்றும் LVD ஒட்டுநர் உரிமம் தேவை.
சம்பள விவரம்
டெக்னிக்கல் உதவியாளர் பதவிக்கு நிலை 7 கீழ் ரூ.44,900 முதல் ரூ.1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
துணை அதிகாரி பதவிக்கு நிலை 6 கீழ் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
டெக்னீஷியன் பதவிக்கு நிலை 3 கீழ் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
டிரைவர் பதவிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். திறன் தேர்வு தகுதித் தேர்வாகும். துணை அதிகாரி பதவிக்கு உடற்தகுதித் தேர்வு உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இஸ்ரோ வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.isro.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் திரும்ப செலுத்தப்படும். இதர பிரிவினருக்கு ரூ.500 திரும்ப செலுத்தப்படும். பதவிக்கு ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தில் மாற்றம் உண்டு.
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 26 வரை விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் 12.08.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 26.08.2025
எழுத்துத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்
திறன் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்
இஸ்ரோ பணி வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளமாக உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி மற்றும் அனுபவம் 26.08.2025 தேதியின்படி இருக்க வேண்டும்.
0 Comments