டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழ்கண்ட படிகளை பின்பற்றினால், ஹால் டிக்கெட்டை எளிதாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான www.tnpsc.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
அதில் ஏற்கனவே பதிவு செய்தோர் என்ற பொத்தானை அழுத்தவும்.
பின்னர் உங்கள் நிரந்தரப் பதிவு மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழையவும்.
இப்போது திரையில் உங்கள் சுயவிவர பக்கத்தில், ஹால் டிக்கெட் என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இப்போது திரையில் தோன்றும் TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) 2025 என்பதற்கு நேராக டவுன்லோட் ஹால் டிக்கெட் என்று இருக்கும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைய வேண்டும்.
இப்போது திரையில் குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
0 Comments