தமிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) - என்ற திட்டத்திற்கு பணியாளர்கள் சுழற்சிமுறையில் 24மணிநேரமும்(24X7) பணிபுரிந்திட பல்வேறு பணியிடங்கள் நிர்ப்பட இருக்கின்றன.
என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
வழக்கு பணியாளர் (Case Worker)
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி :
Master's of Social Work, Counselling Psychology or Development Management மற்றும்
கணினி இயக்கும் அனுபவம் பெற்று இருத்தல் அவசியம்.
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.18,000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது
வயது வரம்பு : இந்த பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பாதுகாவலர்(Security)
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி : 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.12,000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது
வயது வரம்பு : இந்த பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பல்நோக்கு உதவியாளர் (Multipurposer)
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி :
8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி,
நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராகவும்,
மையத்தினை தூய்மையாக பராமரித்திடவும்,
உள்ளுரைவோரின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்பவராகவும் இருத்தல் அவசியம்.
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.10,000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது
வயது வரம்பு : இந்த பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை வேலூர் மாவட்ட இணையதள முகவரியில் (www.vellore.nic.in) செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 14/7/2025 5.00 மணிக்குள் வேலூர் மாவட்ட ஆட்சியரசுகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமுகநலத்துறை அலுவலகத்தில் சார்ப்பிக்கப்பட வேண்டும்.
0 Comments