மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இயங்குகிறது.
இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் யுபிஎஸ்சி-யின் சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை 29-ம் தேதி வெளியானது. மொத்தம் 230 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
அமலாக்க அதிகாரி அல்லது கணக்கு அதிகாரி மற்றும் உதவி வருமான நிதி ஆணையர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள், நிறுவன சட்டம்/ தொழிலாளர் சட்டம்/ பொது நிர்வாகம் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
அமலாக்க அதிகாரி/ கணக்கு அதிகாரி (Enforcement Officer) 156
உதவி வருமான நிதி ஆணையர் 74
மொத்தம் 230
அமலாக்க அதிகாரி பதவிக்கான 156 காலிப்பணியிடங்கள் - பொது பிரிவில் 78, ஒபிசி - 42, எஸ்சி - 23, எஸ்டி 12 என நிரப்பப்படும்.
உதவி வருமான நிதி ஆணையர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் பொது பிரிவில் 32, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 7, ஒபிசி - 28, எஸ்சி - 7 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 என்ற அடிப்படையில் நிரப்பப்படும்.
வயது வரம்பு
அமலாக்க அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 30 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினர் 33 வயது வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 35 வயது வரையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 40 வயது வரையும் இருக்கலாம்.
உதவி வருமான நிதி ஆணையர் பதவிக்கு பொது பிரிவினர் 35 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 38 வயது வரையும், எஸ்சி பிரிவில் 40 வயது வரையும், எஸ்டி பிரிவினர் 35 வயது வரையும் இருக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளிகள் 45 வயது வரையும் இருக்கலாம்.
கல்வித்தகுதி
அமலாக்க அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உதவி வருமான நிதி ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்சாலை, தொழிளாளர் சட்டம் அல்லது பொது நிர்வாகம் ஆகியவற்றின் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
7வது ஊழிய குழுவின் நிர்ணயம் படி, அமலாக்க அதிகாரி பதவிக்கு பதவிக்கு நிலை -8 கீழ் சம்பளம் வழங்கப்படும். உதவி வருமான நிதி ஆணையர் பதவிக்கு நிலை-10 கீழ் சம்பளம் வழங்கபப்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
யுபிஎஸ்சி சிறப்பு ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு ஒங்கிணைந்த ஆட்சேர்ப்பு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கான எழுத்துத் தேர்வு தேசிய அளவில் 78 தேர்வு மையங்களில் நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் மற்றும் புதுச்சேரியில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
எழுத்துத் தேர்வில் பொதுப் பிரிவினர் 50% மதிப்பெண்களுக்கு மேல், ஒபிசி பிரிவினர் 45% மதிப்பெண்களுக்கு மேல் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினர் 40% மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
யுபிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இதற்கான அறிவிப்பு வெளியாகி, தற்போது விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில், ஆகஸ்ட் 18 வரை விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் 29.07.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 18.08.2025
எழுத்துத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம். தேர்விற்கான பாடத்திட்டத்தை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்
0 Comments