ஆதார் கார்டு அப்டேட்: இனி எல்லாமே போன்லயே செய்யலாம், இ சேவை மையத்துக்கே போக வேண்டாம்!!

Follow Us

ஆதார் கார்டு அப்டேட்: இனி எல்லாமே போன்லயே செய்யலாம், இ சேவை மையத்துக்கே போக வேண்டாம்!!

 இந்திய குடிமக்களின் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும் பல்வேறு சேவைகளை பெறுவதற்கும் ஆதார் கார்டு தான் முக்கியமாக கேட்கப்படுகிறது.ஆதார் கார்டு: தற்போது ஆதார் கார்டில் முகவரி மாற்றங்களை நாம் நம்முடைய செல்போன் வாயிலாகவே மேற்கொள்ள முடிகிறது.

                                                                       


பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நாம் இ சேவை மையங்களுக்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் வரும் நவம்பர் முதல் அந்த தேவையும் இருக்காது.அப்டேட் செய்யும் ஆதார் அமைப்பு: தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி கூடிய விரைவில் ஆதார் தகவல்களை அப்டேட் செய்வதை எளிதாக்கும் வகையில் புதிய வசதி கொண்டுவரப்பட இருக்கிறதாம். ஆதாரை மேலாண்மை செய்து வரக்கூடிய இந்திய தனித்துவ அடையாள அமைப்பான யுஐடிஏஐ பொதுமக்கள் ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை மிக எளிமையாக ஆன்லைனிலேயே மாற்றம் செய்யக் கூடிய வகையில் ஆதார் அமைப்பையே தற்போது அப்டேட் செய்து வருகிறது.10க்கும் அதிகமான புற்றுநோய்களை கண்டறியும் சோதனை - ரூ.2,500 கட்டணத்தில் தமிழக அரசு அறிமுகம்..போனிலேயே அனைத்தையும் மாற்றலாம்: வரும் நவம்பர் மாதம் தொடங்கி இந்திய குடிமக்கள் தங்களுடைய ஆதாரின் முக்கியமான தகவல்களைக் கூட டிஜிட்டல் முறையிலேயே எளிதாக மாற்ற முடியும். இது போல பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை மாற்ற நாம் பான் கார்டு, பாஸ்போர்ட் ,பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டி இருக்கிறது.


இனி அந்த வேலையும் கிடையாது.ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை: ஆதாரில் நாம் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அனைத்தையும் ஆன்லைனில் மாற்றம் செய்யலாம், இதற்கான அடையாள ஆவணமாக நாம் அதை தரப் போகிறோம் என்பதை குறிப்பிட்டால் போதும் ஆதார் அமைப்பே நேரடியாக அரசின் தரவு தளத்தில் இருந்து அந்த ஆவணத்தை எடுத்து கொள்ளும். பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பான் கார்டு , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, ஓட்டுநர் உரிமம் , மின் கட்டண ரசீது, சமையல் எரிவாயு ரசீது என அங்கீகரிக்கப்பட்ட தரவு தளங்களில் இருந்து விவரங்களை பெற்று அப்டேட் செய்துவிடும்.வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது..?இ சேவை மையம் செல்ல வேண்டாமா?: எனவே ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யாமல் நொடி பொழுதில் ஆதார் தகவல்களை அப்டேட் செய்யக் கூடிய வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய கைவிரல் ரேகை மற்றும் கருவிழி அப்டேட்டுக்காக மட்டுமே இ சேவை மையம் சென்றால் போதும் மற்ற அனைத்து மாற்றங்களையும் வீட்டிலிருந்தபடியே செய்து கொள்ளலாம்.கியூஆர் கோடு சரிபார்ப்பு: மேலும் போலியாக ஆதார் கார்டு நகல்கள் தாக்கல் செய்யப்படுவதை தடுக்க பத்திரப்பதிவு அலுவலகங்கள் மற்றும் ஆதாரை சரிபார்க்க வேண்டிய சேவைகளில் எல்லாம் கியூ ஆர் கோடு அடிப்படையிலான தகவல் சரிபார்ப்பு நடைமுறை கொண்டுவரப்பட இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நபர் ஆதார் கார்டு நகலை சமர்ப்பிக்க தேவையில்லை, கியூஆர் கோடு முறையில் அவரின் விவரங்கள் ஆன்லைனிலேயே சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments