தேர்வு இல்லை! சிவகங்கை சுகாதார நிலையங்களில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!

Follow Us

தேர்வு இல்லை! சிவகங்கை சுகாதார நிலையங்களில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!

 சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட சங்கராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் (புதுவயல் வட்டாரம்), மானாமதுரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வந்துள்ளது.

                                                                          


என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.



1. மருந்தாளர்


காலியிடங்கள்: 02

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.15,000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

கல்வி தகுதி: D.Pharm/B.Pharm முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் நிலை-3


காலியிடங்கள்: 07

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.13,000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

கல்வி தகுதி: DMLT படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



3. செவிலியர்


காலியிடங்கள்: 101

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.18,000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

கல்வி தகுதி: DGNM / B.Sc Nursing முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



4. பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்- நிலை-II


காலியிடங்கள்: 01

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.60000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது ரூ.14,000/-

கல்வி தகுதி:

1. தாவரவியல்/ உயிரியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் 12வது (HSC) படித்து தேர்ச்சி

2. எஸ்.எஸ்.எல்.சி. அளவில் தமிழ் மொழி புலமை அவசியம்.

3. அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் / அறக்கட்டளை / பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் / சுகாதார ஆய்வாளர் பாடப் பயிற்சிக்கான இரண்டு வருடப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்ட காந்திகிராம கிராமப்புற நிறுவனப் பயிற்சிப் படிப்புச் சான்றிதழ் உட்பட.

வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



5. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்


காலியிடங்கள்: 04

ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.60000 ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது ரூ.8,500/-

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி. படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்

வயது வரம்பு: 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.



எப்படி விண்ணப்பிப்பது?


தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://sivaganga.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு முறை தெளிவாக வாசித்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவண நகல்களை சுய சான்றொப்பமிட்டு, இணைத்து, கீழ்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.



விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:


நிர்வாக செயலாளர்,

மாவட்ட நல வாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம்,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,

சிவகங்கை.

தொலைபேசி எண்: 04575-240524.


விண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லை


தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2025

Post a Comment

0 Comments