தமிழ்நாட்டில் வீடுதேடி ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டதில் முதற்கட்டமாக முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு விநியோகிக்க முடிவு

Follow Us

தமிழ்நாட்டில் வீடுதேடி ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டதில் முதற்கட்டமாக முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு விநியோகிக்க முடிவு

 தமிழ்நாட்டில் விரைவில் வீடுதேடி ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டமானது அமல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டமானது முதற்கட்டமாக மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு சோதனை முறையில் அமல்படுத்தப்படவுள்ளது.

                                                                        


இந்த நிலையில் தற்போது சென்னை வேளச்சேரியில் உள்ள நியாயவிலைகடைகளில் அந்த கடைகளுக்கான எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முதியவர்கள், மாற்றுதிறனாளிகளிடம் நியாயவிலை பணியாளர்கள் வீடுதேடி ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் சோதனை முயற்சியை மேற்கொண்டுவருகின்றனர்.


எல்ல ரேசன் பொருட்களையும் ஒரு வாகனத்தில் எடுத்துக்கொண்டு அவர்கள் வீடுகளுக்கே சென்று முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு அளித்துவருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் கடைகளில் பொருட்களை வாங்குகின்றனர். இந்த மக்கள் அனைவரும் நேரடியாக நியாயவிலை கடைகளுக்கு சென்று கைவிரல் ரேகைகளை பதிவு செய்த பிறகே ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுவருகிறது.


இதில் முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு மட்டும் அவர்களுக்கு உதவியாக உள்ள மற்றொரு நபரிடம் ரேசன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியவர்கள் பயன்பெறும் வகையில் அவர்கள் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் திட்டமானது விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

Post a Comment

0 Comments