ஈரோடு மாவட்டத்தில் வேலை; 8-ம் வகுப்பு தகுதி முதல் விண்ணப்பிக்கலாம் - 27 காலிப்பணியிடங்கள்

Follow Us

ஈரோடு மாவட்டத்தில் வேலை; 8-ம் வகுப்பு தகுதி முதல் விண்ணப்பிக்கலாம் - 27 காலிப்பணியிடங்கள்

 மருத்துவத்துறையில் பணி வாய்ப்பை எதிர்பார்வரா நீங்கள்? ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொது சுகாதாரத்துறையின் கீழ் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.


ஹீமோகுளோபினோபதி ஆலோசகர், சிறப்பு கல்வியாளர், டிரைவர், ரேடியோகிராப்பர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிரப்பப்படுகிறது.பணியின் விவரங்கள்


பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

ஹீமோகுளோபினோபதி ஆலோசகர் 1

சிறப்பு கல்வியாளர் 1

ஆடியோ மெட்ரிக் உதவியாளர் 1

ரேடியோகிராப்பர் 1

MMU டிரைவர் 1

MMU கிளீனர் 1

தூய்மை பணியாளர் 1

பல்துறை மருத்துவமனை பணியாளர் 12

சித்தா - பல்துறை மருத்துவமனை பணியாளர் 5

சித்தா - சிகிச்சை உதவியாளர் 3

மொத்தம் 27

வயது வரம்புஇப்பணியிடங்களுக்குக்கான வயது வரம்பு குறித்த தகவல்கள் அறிவிப்பில் இடம்பெறவில்லை.


கல்வித்தகுதி


ஹீமோகுளோபினோபதி ஆலோசகர் சமூகவியல், உளவியல், சமூக சேவை, நர்சிங் டிப்ளமோ அல்லது நர்சிங் பட்டப்படி ப்பு ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதார்கள் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவரா இருக்க வேண்டும்.

சிறப்பு கல்வியாளர் பதவிக்கு அதற்கான தகுந்த இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பதிவு செய்திருக்க வேண்டும். 40 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

ஆடியோ மெட்ரிக் உதவியாளர் பதவிக்கு அதற்கான 1 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ரேடியோகிராப்பர் பதவிக்கு பி.எஸ்சி ரேடியோகிராப்பி முடித்திருக்க வேண்டும்.

MMU டிரைவர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

MMU கிளீனர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தூய்மை பணியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பல்துறை மருத்துவமனை பணியாளர் பதவிக்கு 80ம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சிகிசிச்சை உதவியாளர் பதவிக்கு நர்சிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்


ஹீமோகுளோபினோபதி ஆலோசகர் பதவிக்கு ரூ.18,000 வழங்கப்படும்.

சிறப்பு கல்வியாளர் பதவிக்கு ரூ.23,000 வழங்கப்படும்.

ஆடியோ மெட்ரிக் உதவியாளர் பதவிக்கு ரூ.17,250 வழங்கப்படும்.

ரேடியோகிராப்பர் பதவிக்கு ரூ.13,3000 வழங்கப்படும்.

MMU டிரைவர் பதவிக்கு ரூம்13,500 மாதம் வழங்கப்படும்.

MMU கிளீனர், தூய்மை பணியாளர், பல்துறை மருத்துவமனை பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.8,500 வழங்கப்படும்.

சித்தா - பல்துறை மருத்துவமனை பணியாளர் பதவிக்கு ஒரு நாளுக்கு ரூ.300 வழங்கப்படும்.

சிகிச்சை உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து நேர்காணல் வழியாக ஆட்கள் தேர்வு செய்யபப்ட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை உதவியாளர் பதவிக்கு நேர்காணல் கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு https://erode.nic.in/ என்ற மாவட்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து நேரிலோ அல்லது தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்த்துடன் பிறந்த தேதிக்கான சான்றாக பிறப்பு சான்றிதழ் அல்லது 10.12 மதிப்பெண் சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ்கள், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை, வகுப்பு பிரிவு சான்றிதழ் மற்றும் இதர தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழு சங்கம்

திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு - 638012.

தொலைபேசி எண் - 0424-2431020.


முக்கிய நாட்கள்


விவரம் தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 25.07.2025

நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments