இந்திய விமான படையில் சேர அழைப்பு! 17 முதல் 21 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

Follow Us

இந்திய விமான படையில் சேர அழைப்பு! 17 முதல் 21 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்திய விமானப்படையில் சேருவதற்கான அரிய வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.

                                                                               


இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 17 வயது முதல் 21 வயது உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவ, மாணவிகள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அதாவது தற்போது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள், அதுவும் விமான படையில் சேர வேண்டும் என ஆர்வம் உள்ளவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.


அக்னி வீர்வாயு


மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பை நடத்துகிறது. அதன்படி, விமானப்படைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ஆக்னிவீர்வாயு என்ற பெயரில் அழைக்கப்படுவார்கள். இப்போது இந்த திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை வீரர்கள் தேர்வு மையத்தில் திறந்தவெளி ஆட்சேர்க்கை தேர்வு நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இது ஒரு நல்ல வாய்ப்பு. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். இளம் வயதில் விமானப்படையில் பணியாற்றக்கூடிய வாய்ப்பு என்பது அரிய வாய்ப்பு.


விமானப்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின் முழு விவரம்


இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பணியில் சேர சென்னை தாம்பரம் விமானப்படை வீரர்கள் தேர்வு மையத்தில் திறந்தவெளி ஆட்சேர்க்கை தேர்வு நடைபெற உள்ளது. சென்னை தாம்பரம், விமானப்படை வீரர்கள் தேர்வு மையத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு 50% மதிப்பெண்களுடன் தேர்வானவர்கள் விண்ணப்பிக்கலாம். 01-01-2026 அன்று வயது வரம்பு 17 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு குறையாமலும், 21 வயதுக்கு மிகாமலும் உள்ள இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.


எப்போது ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது?


இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் பொருட்டு 02-09-2025 முதல் ஆண்களுக்கும், 05-09-2025 முதல் பெண்தேர்வர்களுக்கும் திறந்தவெளி ஆட்சேர்க்கை தேர்வு நடைபெற உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த அறிவிப்பை தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளர். கூடுதல் தகவல்களுக்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும்

Post a Comment

0 Comments