திருவண்ணாமலையில் செவிலியர் வேலைவாய்ப்பு; 153 காலிப்பணியிடங்கள் உடனே விண்ணப்பிக்க விவரங்கள் இதோ

Follow Us

திருவண்ணாமலையில் செவிலியர் வேலைவாய்ப்பு; 153 காலிப்பணியிடங்கள் உடனே விண்ணப்பிக்க விவரங்கள் இதோ

 திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? மருத்துவத்துறையில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு இதோ..

                                                                              


மாவட்ட நலவாழ்வு சங்கம் மொத்தம் 153 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுகாதாரத்துறையில் கீழ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர், மருந்தாளுநர், பல்துறை மருத்துவமனை ஊழியர், பாதுகாப்பாளர், டிரைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரபப்படுகிறது.


பணியின் விவரங்கள்


பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

செவிலியர் (Staff Nurse) 139

மருந்தாளுநர் (Pharmacist) 3

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் (DEO) 3

ரேடியோகிராப்பர் 1

பல்துறை மருத்துவமனை பணியாளர் 4

SNCU பாதுகாப்பாளர் 1

டிரைவர் 2

மொத்தம் 153

தேசிய நலவாழ்வு குழும திட்டத்டின் கீழ் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, சுகாதார பகுதிகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி


செவிலியர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் கீழ் DGNM அல்லது இளங்கலை நர்சிங் பட்டப்படிப்பு (B.Sc Nursing) முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மருந்தாளுநர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.Pharm அல்லது D.Pharm முடித்திருக்க வேண்டும். மேலும், கட்டாயம் தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு கணினி பயன்பாட்டில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ரேடியோகிராப்பர் பதவிக்கு ரேடியோ நோயறிதல் தொழில்நுட்பத்தில் 2 ஆண்டு டிப்ளமோ அல்லது ரேடியோகிராப்பியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்கலாம்.

பல்துறை மருத்துவமனை பணியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

SNCU பாதுகாப்பாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எழுதப் படிக்க தெரிந்திருக்கலாம்.

டிரைவர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கனரக வாகனம் ஓட்ட உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

சம்பள விவரம்


செவிலியர் பதவிக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.

மருந்தாளுநர் பதவிக்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ரூ.13,500 வழங்கப்படும்.

ரேடியோகிராப்பர் பதவிக்கு மாதம் ரூ.13,500 வழங்கப்படும்.

பல்துறை மருத்துவமனை பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.8,500 வழங்கப்படும்.

SNCU பாதுகாப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.8,500 வழங்கப்படும்.

டிரைவர் பதவிக்கு மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதார துறையில் இப்பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படுவதால், நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை

செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்ட இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் வழியாகவோ அல்லது நேரிலோ அனுப்பி விண்ணப்பிக்கலாம். செவிலியர் பணிக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 6 தேதிக்குள் அலுவலகத்தை சென்று அடைய வேண்டும்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

செயல்பாட்டு செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

பழைய அரசு மருத்துவமனை வளாகம்,

செங்கம் சாலை, திருவண்ணாமலை.


முக்கிய நாட்கள்


விவரம் தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள் செவிலியர் பணிக்கு 08.08.2025 மாலை 5 மணி வரை, இதர பதவிகளுக்கு 04.08.2025 மாலை 5 மணி வரை

நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். கூடுதல் விவரங்களை மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments