கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகம், கோயம்புத்தூர் மாநகராட்சியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. பணியின் பெயர்: Vaccine Cold Chain Manager
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.E., or B.Tech in Computer Science or IT with one year experience in Data Base management system admin.
2. பணியின் பெயர்: Genetic Counsellor
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor's degree in Sociology / Psychology /Social Work / Diploma in GNM / BSc Nursing from a recognized university or institution.
3. பணியின் பெயர்: CEmONC Security Guard
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: 8th
4. பணியின் பெயர்: ULB-UHN (RoTN)
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்கள்: 96
கல்வி தகுதி: Should have passed Higher Secondary School Examination and one/two year ANM course conducted from DME approved institution/ Nursing Council.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் - 18.
0 Comments