SSC MTS 2025; மத்திய அரசு வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி போதும்; 1075 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

Follow Us

SSC MTS 2025; மத்திய அரசு வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி போதும்; 1075 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

 மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

                                                                             


மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 1075 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.07.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

நிரப்பப்படும் பதவிகளின் விவரம்

பன்முக உதவியாளர் (Multi-Tasking (Non-Technical) Staff)

ஹவால்தார் (Havaldar in CBIC and CBN)

காலியிடங்களின் விவரம்

பன்முக உதவியாளர் (Multi-Tasking (Non-Technical) Staff) - காலியிடங்களின் எண்ணிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

ஹவால்தார் (Havaldar in CBIC and CBN) - 1075

கல்வித் தகுதி: இந்த பதவிகளுக்கு பத்தாம் (10) வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழி தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 1 மணி 30 நிமிடங்கள் கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் மற்றும் திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 90 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் தலா 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஹவால்தார் பணியிடங்களுக்கு கூடுதலாக உடற்தகுதி தேர்வு நடக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.07.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Post a Comment

0 Comments