Job in Tirunelveli: திருநெல்வேலி மாவட்ட பெண்களுக்கு சூப்பர் வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணீடாதீங்க!

Follow Us

Job in Tirunelveli: திருநெல்வேலி மாவட்ட பெண்களுக்கு சூப்பர் வேலை வாய்ப்பு! மிஸ் பண்ணீடாதீங்க!

 திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் வள்ளியூரில் ஒருங்கிணைந்த சேவை மையம் (ஒன் ஸ்டாப் சென்டர்) செயல்பட்டு வருகின்றது.

                                                                                


அதில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளஉள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

வழக்கு பணியாளர்
காலியிடம்: 1
தகுதி :
சமூகப்பணி அல்லது உளவியல், சமூகவியல் இளங்கலைப்பட்டம் பயின்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் 2 வருடம் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம் : இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது.

நிபந்தனைகள்:
1. வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
2. திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
3. மேற்காணும் பணியிடங்களுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

எப்படி சேருவது?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் இந்த பணிகளுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்து, தேவையான ஆவண நகல்களை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு அணிஜால் மூலம் அனுப்ப வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்,
திருநெல்வேலி மாவட்டம்.

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 17/06/2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30/06/2025

Post a Comment

0 Comments