பொதுவாக பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் முடித்த சான்றுகளோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கமான ஒன்றாகும்.
இதன் மூலம் பத்தாம் வகுப்பு தகுதி உடைய வேலை வாய்ப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு செய்தி அனுப்பப்படுவதோடு ஒரு சில வேலைகளுக்கு அப்படியே ஆட்கள் எடுத்துக் கொள்ளப்படுவதும் நடக்கும்.
இதனால் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிகிரி முடித்தவுடன் அந்தந்த சான்றிதழ்களை மாணவர்கள் தங்களது அக்கவுண்டில் அப்டேட் செய்வது கட்டாயமாகும். அப்படி கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது அசல் மதிப்பின் சான்றிதழ் பெற்றவுடன் அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு தொடங்கும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு நேரடியாக சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்து கொண்டு உங்கள் மொபைல் செயலியின் மூலமாக இந்த பதிவை செய்து கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகள் புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை செயலாளரால் செய்யப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்வதற்கான புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட உள்ளவற்றை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி. - ஸ்டேட் போர்டு) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றவுடன், தனியாக வேலைவாய்ப்பு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமின்றி, செல்போன் செயலி மூலம் தங்கள் கல்வித் தகுதியை நேரடியாக பதிவு செய்யலாம். வேலைவாய்ப்பு செயலியை பதிவிறக்கம் செய்து, வழிமுறைகளின்படி விவரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்ய முடியும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. அல்லது சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பெற்றவுடன், https://labour.py.gov.in அல்லது https://ee.py.gov.in என்ற தொழிலாளர் துறை இணையதள முகவரிகள் வழியாக, அந்த செயலியில் கல்வி விவரங்களை பதிவு செய்யலாம். பதிவு செய்யும் நாள் தானாகவே வயது நிர்ணயத்திற்கான அடிப்படையாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை இவ்வாறு பதிவுசெய்தவுடன், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும், இந்த முறையால் நேரம் மற்றும் பயணச் செலவை குறைக்க முடியும் என்றும் தொழிலாளர் துறை தகவல் தெரிவித்துள்ளது.
0 Comments