டிகிரி முடித்திருந்தால் போதும்.. தென்காசி அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு ! மிஸ் பண்ணீடாதீங்க

Follow Us

டிகிரி முடித்திருந்தால் போதும்.. தென்காசி அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு ! மிஸ் பண்ணீடாதீங்க

 தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டாரத்தில், தூய்மை பாரத இயக்க பகுதியில் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                               


என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளஉள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator)

சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.22,000/- + பயணப்படி Rs.3,000/- ஊதியமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
MSW / B.Sc Environment Science/ Environment Eng. / B.Sc Visual Communication பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

ஊர் : தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

பணி அமர்த்தப்படும் இடம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம், செங்கோட்டை வட்டாரம்.

எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://tenkasi.nic.in/ என்ற மாவட்டத்தில் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:ஏதுமில்லை

தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.07.2025

Post a Comment

0 Comments