பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளஉள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
பணியிட எண்ணிக்கை : 1
கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
ஒதுக்கீடு:
பொதுப்பிரிவு: கொரானோ தொற்றினாலோ. இதர காரணங்களாலோ.
றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் (மகன்/மகள்) (அரசாணை (நிலை) எண்.8. யாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த (ஆர்) துறை, நாள்: 10.01.2020-ல் தந்தையையும் தாயும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை இவ்வினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது). முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு :
1/07/2025-ல் வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும், அதிகபட்ச வயது 32 ஆகும், மேலும் அதிகபட்ச வயது வரம்பு தளர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி தனைகள்) சட்டம், 2016ன் படி இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இங்கே கிளிக் செய்து இந்த பணிக்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். படிவத்தை பூர்த்தி செய்து, பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பத்தரார்களின் அடையாள மற்றும் இருப்பிட சான்றுக்காக கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் புகைப்பட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
அனுப்பவேண்டிய சான்றிதழ்கள்:
கல்வி தகுதிச் சான்று,
ஓட்டுநர் உரிமம்,
பான் கார்டு, வாக்காளர்
அடையாள அட்டை,
குடும்ப அட்டை,
ஆதார் அட்டை
புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கென குறிப்பிட்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும்.
படத்தின் மேல்புறம் சுய சான்றொப்பமிடவேண்டும்.
புகைப்படத்தை விண்ணப்பத்தில் அடித்து இணைக்கக் கூடாது.
உரிய முறையில் சுய சான்றொப்பமிட தேவையான சான்றாவனங்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அசல் ஆவணங்கள் இணைக்கப்படக்கூடாது.
முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/- க்கான அஞ்சல் தலைகள் ஒட்டப்பட்ட உறையுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு பதிவுத் தபால் மூலமாக 11.07.2025 5.45 மணிக்குள் கிடைக்கத்தக்க அளவில் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
2 வது தெரு, கணபதிநகர்,
எளம்பலூர் ரோடு,
பெரம்பலூர்-621 212.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.
பின் குறிப்பு:
நேர்காணல் தேதியும், மணியும் தங்களுக்கு தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலம் பின்னர் அறிவிக்கப்படு
0 Comments