1. வருமான வரி ஃபைலிங் டெட்லைன் நீட்டிப்பு!
வருமான வரி ரிட்டர்ன் (ITR) ஃபைலிங் டெட்லைன், 2024-25 நிதியாண்டுக்கு (அசஸ்மென்ட் இயர் 2025-26) செப்டம்பர் 15, 2025 ஆக நீட்டிக்கப்பட்டிருக்கு.
முன்னாடி இது ஜூலை 31 ஆக இருந்தது. இந்த 46 நாள் கூடுதல் காலம், வரி கணக்கு தாக்கல் செய்யறவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். டிப்ஸ்: Form 16, Form 26AS, AIS (Annual Information Statement) மாதிரியான ஆவணங்களை முன்கூட்டியே தயார் பண்ணி, கடைசி நிமிஷ குழப்பத்தை தவிர்க்கலாம். சீக்கிரமா ஃபைல் பண்ணுங்க, இது எரர்ஸை குறைக்கும்
2. PAN கார்டுக்கு ஆதார் கட்டாயம்!
ஜூலை 1, 2025 முதல் புது PAN கார்டு வாங்கறவங்களுக்கு ஆதார் வெரிஃபிகேஷன் கட்டாயமாகுது. இதுக்கு முன்னாடி ஒரு Valid ID மற்றும் பிறப்பு சான்றிதழ் இருந்தா போதுமானதா இருந்தது. இப்போ ஆதார் இல்லாம PAN வாங்க முடியாது. இது டிஜிட்டல் இன்டக்ரேஷனை மேம்படுத்தவும்,டூப்ளிகேட் அல்லது ஃபேக் PAN கார்டுகளை தடுக்கவும் செய்யற முயற்சி. மேலும், டிசம்பர் 31, 2025-க்கு மேல ஆதாரை PAN-ஓட இணைக்கலைனா, PAN கார்டு வேலை செய்யாது. ஒரு நபருக்கு ஒரு PAN கார்டு மட்டுமே இருக்கணும், இல்லைனா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்!
3. கிரெடிட் கார்டு மாற்றங்கள்: SBI, HDFC, ICICI!
பெரிய வங்கிகளான SBI, HDFC, ICICI ஆகியவை ஜூலை 2025 முதல் கிரெடிட் கார்டு கட்டணங்களில் மாற்றங்களை கொண்டு வருது:
SBI கார்டு: ஜூலை 15 முதல், ELITE மற்றும் PRIME கார்டுகளுக்கு இலவச ஏர் ஆக்ஸிடன்ட் இன்ஷூரன்ஸ் நிறுத்தப்படுது. கூடுதல் கட்டணங்களும் விதிக்கப்படலாம்.
HDFC கார்டு: ஜூலை 1 முதல், வாடகை செலுத்துதல்,ஆன்லைன் கேமிங், வாலட் லோடிங்குக்கு 1% கட்டணம் விதிக்கப்படுது (மாதம் ஒரு ட்ரான்ஸாக்ஷனுக்கு அதிகபட்சம் 4,999 ரூபாய்). இன்ஷூரன்ஸ் ட்ரான்ஸாக்ஷன்களுக்கு ரிவார்டு பாயிண்ட்ஸ் குறைக்கப்படுது.
ICICI வங்கி: ATM ட்ரான்ஸாக்ஷன்களுக்கு புது கட்டணங்கள், கிரெடிட் கார்டு ரிவார்டு ப்ரோக்ராம்களில் மாற்றங்கள் அமலுக்கு வருது.
4. ரயில் டிக்கெட்: தத்கல் மற்றும் கட்டண மாற்றங்கள்!
ஜூலை 1, 2025 முதல், IRCTC வெப்சைட் அல்லது ஆப்பில் தத்கல் டிக்கெட் புக்கிங்குக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயம். ஜூலை 15 முதல், ஆதார் OTP வெரிஃபிகேஷனும் தேவைப்படும். இது டூப்ளிகேட் புக்கிங்கை தடுக்கறதுக்கு உதவும். மேலும், ரயில் கட்டணங்களில் சிறிய உயர்வு இருக்கலாம்:
நான்-ஏசி கிளாஸ்: ஒரு கி.மீ-க்கு 1 பைசா உயர்வு.
ஏசி கிளாஸ்: ஒரு கி.மீ-க்கு 2 பைசா உயர்வு.
இந்த மாற்றங்கள் 2025-26 நிதியாண்டுக்கு 700 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை தரும்னு எதிர்பார்க்கப்படுது. டிப்ஸ்: தத்கல் புக்கிங்குக்கு ஆதார் டீடெயில்ஸை ரெடியா வச்சுக்கோங்க
5. GST ஃபைலிங் மாற்றங்கள்!
ஜூலை 2025 முதல், GSTR-3B ஃபார்ம் எடிட் பண்ண முடியாது. இதுல உள்ள டேக்ஸ் லயபிளிட்டி, GSTR-1/GSTR-1A/IFF-ல இருந்து ஆட்டோ-பாபுலேட் ஆகிடும். மேலும், ஜூலை டேக்ஸ் பீரியட் முதல், GSTR-1, GSTR-3B, GSTR-9 மாதிரியானGST ரிட்டர்ன்களை 3 வருஷத்துக்கு மேல தாக்கல் செய்ய முடியாது.
6. டிஜிட்டல் பேமென்ட்ஸ்: UPI மாற்றங்கள்!
UPI-யில் புது மாற்றங்கள் ஏப்ரல் 2025-ல இருந்து அமலுக்கு வந்தாலும், ஜூலை 2025-ல இதோட பாதுகாப்பு மேம்பாடுகள் முக்கியமாகுது. இனாக்டிவ் மொபைல் நம்பர்களை UPI-யில் இருந்து நீக்கறதுக்கு NPCI வங்கிகளுக்கு உத்தரவு போட்டிருக்கு. இது ஃப்ராடு, மிஸ்யூஸை தடுக்கறதுக்கு உதவும். டிப்ஸ்: UPI-க்கு பயன்படுத்தற மொபைல் நம்பர் ஆக்டிவா இருக்கானு செக் பண்ணுங்க, இல்லைனா வங்கியில் அப்டேட் பண்ணுங்க
7. மற்ற மாற்றங்கள்: வங்கி கட்டணங்கள்!
SBI, HDFC, ICICI மாதிரியான வங்கிகள் ஜூலை 2025 முதல் ATM ட்ரான்ஸாக்ஷன்கள், மினிமம் பேலன்ஸ் மெயின்டெயின் பண்ணாததுக்கு புது கட்டணங்களை விதிக்கலாம். உதாரணமா, ICICI வங்கி ATM ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க திட்டமிடுது. டிப்ஸ்: வங்கி ஸ்டேட்மென்ட்ஸை செக் பண்ணி, மினிமம் பேலன்ஸை மெயின்டெயின் பண்ணுங்க, இல்லைனா அபராதம் வரலாம்.
0 Comments