50 ஆயிரம் சம்பளத்தில் சென்னை கோவிலில் அலுவலக உதவியாளர் பணி.. 8 ஆம் வகுப்பு தகுதி தான்!

Follow Us

50 ஆயிரம் சம்பளத்தில் சென்னை கோவிலில் அலுவலக உதவியாளர் பணி.. 8 ஆம் வகுப்பு தகுதி தான்!

 இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சென்னை வியாசர்பாடியில் உள்ள கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

                                                                                 


8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் 15,700 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.


தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பல்வேறு வகையான பணியிடங்களை வரிசையாக நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை வியாசர்பாடியில் உள்ள கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் காலியாக உள்ள 5 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? உளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.


வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் உப அறநிறுவனமான வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்தவர்களிடம் இருந்து 20.06.2025 முதல் 19.07.2025 வரை அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் விவரம், சம்பளம்:


* எழுத்தர், அலுவலக உதவியாளர், மடப்பள்ளி, காவலர், திருவலகு என மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


* சம்பளத்தை பொறுத்தவரை எழுத்தர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.


* அலுவலக உதவியாளர், மடப்பள்ளி, காவலர், திருவலகு ஆகிய பணிகளுக்கு ரூ.11,600- 36,800 வரை வழங்கப்படும்.

கல்வித் தகுதி:


* எழுத்தர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.


* அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

* மடப்பள்ளி பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். அற நிறுவனங்களின் வழக்கத்திற்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

* காவலர் மற்றும் திருவலகு பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பத்தை அறநிலையத்தறை இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை துணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை 26 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 19.07.2025 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். அதன் பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Post a Comment

0 Comments