மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 2025 வேலைவாய்ப்பு! Audiologist, Therapeutic Assistant, Mid Level HCP, MPHW போன்ற பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு இல்லை, நேர்காணல் மட்டுமே. ₹23,000 வரை சம்பளம். கடைசி தேதி: ஜூலை 4, 2025.
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப, மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society - DHS) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வாய்ப்பு தமிழ்நாடு அரசு வேலை தேடுவோருக்கு ஒரு பொன்னானதாகும். இதில் மொத்தம் 37 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 4, 2025. தேர்வு கிடையாது, நேர்காணல் மூலம் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட நலவாழ்வு சங்கம் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் இங்கே:
1. Audiologist - Speech Therapist - DEIC:
சம்பளம்: மாதம் ₹23,000
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பேச்சு மற்றும் மொழி நோயியலில் இளங்கலை பட்டம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல்.
2. Therapeutic Assistant (Female):
சம்பளம்: மாதம் ₹13,000
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: தமிழ்நாடு அரசு வழங்கிய செவிலியர் சிகிச்சை படிப்பில் டிப்ளமோ சான்றிதழ்.
வயது வரம்பு: 59 வயதுக்கு மிகாமல்.
3. Mid Level - Health Care Provider- MTM:
சம்பளம்: மாதம் ₹18,000
காலியிடங்கள்: 23
கல்வித் தகுதி: DGNM/B.Sc செவிலியர்/தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்துடன் B.Sc செவிலியர்.
வயது வரம்பு: 50 வயதுக்கு மிகாமல்.
4. Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade-II - MTM:
சம்பளம்: மாதம் ₹14,000
காலியிடங்கள்: 12
கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்திருக்க வேண்டும். SSLC/10ஆம் வகுப்பில் தமிழ் மொழி ஒரு பாடமாக இருக்க வேண்டும். பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (MPHW) (ஆண்) / சுகாதார ஆய்வாளர் / சுகாதார ஆய்வாளர் பயிற்சி 2 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல்.
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், [https://namakkal.nic.in/] என்ற நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: ஜூன் 17, 2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 4, 2025
மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல் மாவட்டம்.
தொலைபேசி எண்: 04286 - 281424.
விண்ணப்பங்கள் நேரில் அல்லது விரைவுத் தபால் மூலமாக அனுப்பலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த சிறந்த அரசு வேலை வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
0 Comments