ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்! கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி! அரசின் அதிரடி திட்டம்! ஜூலை 1 முதல் தொடக்கம்!

Follow Us

ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்! கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி! அரசின் அதிரடி திட்டம்! ஜூலை 1 முதல் தொடக்கம்!

 தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் நியாய விலை கடைகளில் அரிசி, பருப்பு, சக்கரை, உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் மாதம் தோறும் நியாயவிலை கடைக்கு சென்று, பயோமெட்ரிக் வைத்து பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் உள்ளது.

                                                                               


ரேஷன் பொருட்கள் வழங்கும் நியாய விலை கடை

தமிழ்நாடு நியாய விலை கடைகளில் 2.25 கோடி குடும்பத்தினர் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய, உணவுப் பொருட்களை மாதம் தரும் நியாய விலை கடைகளில் வாங்கி வருகின்றனர். இவர்கள் அனைவரும் மாதந்தோறும் கடைக்குச் சென்று, கைரேகை பதிவு செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர்.

ஆனால் மூத்த குடிமகன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், நேரடியாக சென்று பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தங்கள் சார்பில் வேறு நபர்களை அனுப்பி பொருட்களை வாங்கி வருகின்றனர். இது போன்ற நபர்கள் மாதம் தோறும் வேறு ஒருவரை, நாடி இருக்கவேண்டிய சூழல் இருந்து வருகிறது.

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளி காடுதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெறுவார்கள் என அரசு முடிவு எடுத்துள்ளது.

முதற்கட்டமாக இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் வரும் ஒன்றாம் தேதி முதல் 5ஆம் தேதி வரை 10 மாவட்டங்களில் உள்ள செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

எந்தெந்த மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது ?

முதற்கட்டமாக இந்த திட்டம் சென்னை, நெல்லை, திண்டுக்கல், சிவகங்கை, தர்மபுரி, ஈரோடு, ராணிப்பேட்டை, நீலகிரி, கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் ?

வேன் மூலமாக ரேஷன் பொருட்கள் மற்றும் விற்பனை கருவி ஆகியவை எடுத்துச் செல்லப்படும். மூத்த குடிமக்களின் ஆதார் சரி பார்க்கப்பட்டு ரேஷன் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள், தகவல் சேகரித்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

10 மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சோதனை முறையில் திட்டத்தை செயல்படுத்தும் போது, ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆராயப்படும். அதன்பிறகு அந்த பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, இறுதியாக தமிழ்நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு வீடு தேடி டெலிவரி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments