வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் வேலைக்கு செல்வதும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்ல முடியும்?
அப்படியான இலவச பயிற்சி ஒன்று குறித்த அறிவிப்பு இப்போது வந்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் TNSDC வழங்கும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியில் தையல் மற்றும் வீட்டு ஜவுளிகள் துறையில் திறமை பெற்று வேலை வாய்ப்பிற்குத் தயார் செய்யும் திட்டமாகும். கீழே முழுமையான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது:
என்ன கற்றுக்கொள்ளலாம் ?
தொடக்க நெசவுத் திறன்களை கற்றுத் தரும் முழுமையான பயிற்சி.
மெஷின் செயல்பாடுகள்: தையல், பாபின் பொருத்தல், பேடல் கட்டுப்பாடு
நேர்தூக்குகள், பின்தைத்து, டாக்கிங் மற்றும் ஹெம்கள் தயாரித்தல்
ஸிக்சாக் தையல் நுட்பங்கள் போன்றவற்றை கற்றுக்கொள்ளலாம்.
பயிற்சி முடிவில், பயிற்சியாளர்கள் தையல் துறையில் தங்களைத் தாங்கள் நம்பிக்கை உடையவர்களாகவும், திறமையானவர்களாகவும் வளர்த்துக் கொள்ளலாம்.
என்ன தகுதி வேண்டும்? குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டுமே இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.பயிற்சி காலம்: 100 மணிநேரங்கள் (Training Period)பயிற்சி இடம் : பொள்ளாச்சி பயிற்சி முறை: நேரில், வகுப்பறை பாணியில் பயிற்சி வழங்கப்படும்வேலை வாய்ப்பு : Premier Fine Linens நிறுவனத்தில் Sewing Operator பணிக்கு வாய்ப்பு உள்ளது.ஆரம்ப சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு ₹16,000 முதல் ₹20,000 வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது
எப்படி சேருவது?
இந்த பயிற்சியில் நீங்களும் சேர வேண்டும் என்று நினைத்தால், பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/3824முக்கிய குறிப்பு :இது ஒரு முழுமையாக இலவசமான அரசு சான்றிதழ் பாதிப்பாகும்.உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பு.மிஸ் பண்ணீடாதீங்க
0 Comments