ஆதார் எண் இல்லையென்றாலும் பத்திரப் பதிவு செய்யலாம்: புதிய வரைவு மசோதாவில் முன்மொழிவு

Follow Us

ஆதார் எண் இல்லையென்றாலும் பத்திரப் பதிவு செய்யலாம்: புதிய வரைவு மசோதாவில் முன்மொழிவு

 

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் வசதிக்காக நவீன பத்திர பதிவு முறைக்கான பதிவுத்துறை மசோதா 2025ன் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                           


இதில், ஆன்லைன் பதிவு, ஆவணங்களை ஏற்றுக்கொள்வது, மின்னணு பதிவுச் சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் பதிவுகளை டிஜிட்டல் முறையில் பராமரித்தல் ஆகியவற்றை ஆதரிப்பதற்கான விதிகளை அறிமுகப்படுத்துகின்றது. இது தகவல் அறிந்த ஒப்புதலுடன் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை அனுமதிக்கிறது. மேலும் ஆதார் இல்லாதவர்களுக்கு அல்லது அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்வு செய்பவர்களுக்கு மாற்று சரிபார்ப்பு வழிமுறைகளையும் வழங்குகின்றது " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments