மத்திய அரசு வயதானவர்கள் வயதான காலத்தில் எதிர்கொள்ளும் ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு உதவும் வகையில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து முதியவர்கள் ஆயுஷ்மான் கார்டு பெற்றுக்கொண்டால் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கார்டுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆயுஷ்மான் கார்டு பெறுவது எப்படி?
- ஆயுஷ்மான் கார்டைப் பெற, முதலில் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmjay.gov.in -க்குச் செல்ல வேண்டும்.
- அந்த வெப்சைட்டில், இங்கே பல ஆப்சன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் 'PMJAY for 70+' ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு, 'Enrol for PMJAY for 70+' என்ற ஆப்ஷன் இருக்கும். அதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர், உங்கள் ஆதார் அட்டை விவரங்களை இங்கே கொடுத்து, அதனை வெரிஃபை செய்ய வேண்டும்.
- ஆதார் சரிபார்ப்புக்கு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை நீங்கள் இங்கே உள்ளிட வேண்டும். இப்போது, ஆதார் வெரிஃஇகேஷன் முடியும்.
- அதற்கு பிறகு அங்கே கேட்கப்படும் உங்கள் ஆவணங்களை இங்கே பதிவேற்றவும். அதாவது, வயதானவரின் புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அதன் பின்னர் சப்மிட் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து, உங்கள் விண்ணப்பம் எல்லா தகுதிகளையும் பூர்த்தி செய்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நோடிபிகேஷன் காண்பிக்கும்
- அதன் பிறகு, நீங்கள் ஆயுஷ்மான் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையைப் பெற முடியும்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா முக்கியத்துவம்
ஒவ்வொரு வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு அவர்கள் பெயரில் இந்த கார்டை மகன் அல்லது மகள் பெற்று கொடுப்பது அவசியம். ஏனென்றால் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் இருக்கும் என்பதால் அதற்கான சிகிச்சை செலவுகளை இந்த திட்டத்தின் மூலம் செய்து கொள்ளலாம். மத்திய அரசு கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பை பலர் இன்னும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர்.
0 Comments