PVC ஆதார் கார்டு பற்றி தெரியுமா..? ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி..? உங்கள் வீடு தேடி வரும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Follow Us

PVC ஆதார் கார்டு பற்றி தெரியுமா..? ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி..? உங்கள் வீடு தேடி வரும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

 இந்தியாவில் ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு தொடர்பான பல பணிகளுக்கு ஆதார் தேவைப்படுகிறது.

                                                                               


பள்ளியில் சேர்க்கை, வங்கிக் கணக்கு தொடங்குதல் அல்லது அரசுத் திட்டத்தில் பயன்பெற கட்டாயம் ஆதார் அவசியமாகிவிட்டது. எனவே, ஆதார் எங்காவது தொலைந்துவிட்டாலோ அல்லது தேவைப்படும்போது உங்களிடம் இல்லாமலோ இருந்தால், சிக்கல் ஏற்படலாம். ஆனால், அதை மீண்டும் பெறுவது கடினம் அல்ல. வீட்டில் இருந்த படியே ஆதாரை அட்டையை எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். 


ஆதார் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி..?


* UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/portal என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 

* பின்னர் “Download Aadhaar” என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். இப்போது, உங்கள் என்ரோல்மென்ட் ஐடி அல்லது ஆதார் நம்பர், விர்ச்சுவல் ஐடி நம்பர் போன்றவற்றை என்டர் செய்ய வேண்டும். 


* அதன் பிறகு “Send OTP” என்பதைக் கிளிக் செய்தால், ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும். 


* அந்த OTP நம்பரை என்டர் செய்து, “Download your e-aadhar card” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். OTP சரிபார்ப்புக்குப் பிறகு, நீங்கள் e-Aadhaar PDF-ஐ டவுன்லோட் செய்யலாம். தேவைப்பட்டால் நீங்கள் PDF-ஐ பிரிண்ட் எடுத்து லேமினேட் செய்யலாம்.

PVC ஆதார் கார்டு பெறுவது எப்படி..? 


* UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 


* அதில், ஆதார் நம்பர், என்ரோல்மென்ட் ஐடி மற்றும் விர்ச்சுவல் ஐடியை போன்ற ஏதேனும் ஒன்றை வழங்க வேண்டும். 


* பிறகு ஓடிபி சரிபார்ப்புக்காக உங்கள் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். 


* அதில் உள்ளீடு செய்ததும் பிவிசி ஆதாரை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். பிவிசி ஆதார் கார்டு பெற ரூ.50 செலுத்த வேண்டும். 


* அதில் இருந்து 5 முதல் 7 நாட்களுக்குள் உங்கள் வீட்டு முகவரிக்கே ஆதார் டெலிவரி செய்யப்படும்.



Post a Comment

0 Comments