அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்!

 இந்தியாவிற்கே முன்னோடியான மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் 900,000க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் உள்ளனர்.

                                                                                  


இவர்கள் அனைவரும் தமிழக அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் மக்களுக்காக இயங்கி வரும் அரசு அலுவலகங்களில் நிர்வாகத்திற்கு பங்களிப்பு செய்கிறார்கள். அரசு என்ன மாதிரியான புதிய திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை செயல்படுத்துவது அரசாங்க ஊழியர்கள் தான். எனவே இவர்களது பணி மிகவும் முக்கியமானது. தமிழக அரசின் செயல்பாடுகளையும், செயல்திறனையும் மேம்படுத்தும் முயற்சியில், பல்வேறு செயல் முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு லட்சியப் பயணத்தை அரசு மேற்கொண்டு வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு உத்தரவு


டிஜிட்டல் மயமாக்கல் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதையும் பொதுமக்களுக்கு சேவை வழங்குவதை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த முன்னேற்றங்களுக்கு மத்தியில், அரசு ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பு வந்துள்ளது. அதாவது அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை கட்டாயமாக அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே விதிகள் இருந்த போதிலும் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு அறிவிப்பு


அனைத்து அரசாங்க ஊழியர்களும் பணியில் இருக்கும் போது அவர்களின் புகைப்பட அடையாள அட்டைகளை அணி வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உத்தரவுகள் இருந்தபோதிலும், இந்த விதிகளை பலரும் பின்பற்றாமல் இருப்பது ஏமாற்றமளிக்கும் வகையில் விதமாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பல அரசு ஊழியர்கள் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் உயர்மட்ட நிகழ்வுகளின் போது மட்டுமே தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றசாட்டு பரவலாக இருந்து வருகிறது. இந்த தொடர்ச்சியான விதி மீறல்களை அடுத்து, அடையாள அட்டையை கட்டாயம் அணியுமாறு ஊழியர்களுக்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களின் மெத்தன போக்கை எடுத்து காட்டுகிறது.


இந்த சவால்களுக்கு மத்தியில், அலுவலக நேரத்தில் அடையாள அட்டைகளை அணிவதன் அவசியத்தை மீண்டும் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 7, 2018 அன்று அனைத்து அரசு ஊழியர்களும், குறிப்பாக பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பில் ஈடுபடுபவர்கள் தங்கள் புகைப்பட அடையாள அட்டைகளை அணிய வேண்டும் என்றும், அடையாள அட்டை இல்லாதவர்கள் 60 நாட்களுக்குள் கண்டிப்பாகப் பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு மோசடிகளை தவிர்க்கவும், அனைத்து அரசாங்கப் பிரதிநிதிகளும் எளிதில் அடையாளம் காணக்கூடியவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments