குறிப்பாக இந்த அரசு பேருந்துகளுக்கு கடைசி நேரத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் செல்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு புக் செய்ய முடியும். ஆனால் கடந்த வருடம் 60 நாட்கள் 90 நாட்களாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் அரசு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியானது விரைவில் இ-சேவை மையங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் உள்ள 530க்கும் மேற்பட்ட இ சேவை மையங்கள் மூலமாக அரசு பேருந்து டிக்கெட்டை மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். கிராமப்புற மக்கள் பயனடையும் விதமாகத்தான் இ- சேவை மையங்கள் மூலம் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
.jpeg)
0 Comments