பத்திரப்பதிவு செய்யப்போறீங்களா..? அதிரடியாக வந்த மாற்றம்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை தலைவர்..!!

Follow Us

பத்திரப்பதிவு செய்யப்போறீங்களா..? அதிரடியாக வந்த மாற்றம்..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை தலைவர்..!!

 பத்திரப் பதிவுத்துறையில் நாள்தோறும் ஏராளமானோர் பத்திரப்பதிவுத்துற செய்து வருகின்றனர். மேலும், பொதுமக்களின் வசதிக்காக ஏராளமான திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

                                                                           


இந்நிலையில், பத்திரங்களை பதிவு செய்வதில், சார் பதிவாளர்களிடம் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றுதான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


சார் பதிவாளரால் மறுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவு மூலம் வரும் பத்திரங்களை தற்காலிக எண் அடிப்படையில் பதிவு செய்ய பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், “நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரங்களை, மாவட்ட பதிவாளரின் ஆணை பெற்று, அதனடிப்படையில் டிஐஜி பரிந்துரை பெற்ற பிறகு, சார் பதிவாளரால் ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும். பிறகு, திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் கணினியில் அந்த பத்திரம் தொடர்பான விவரங்களை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே பதிவுக்கு மறுக்கும் போது, அந்த பத்திரத்துக்கு அளிக்கப்பட்ட தற்காலிக எண்ணை மீண்டும் ஒதுக்க, சார் பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பதிவுக்கு தற்காலிக எண் ஒதுக்கப்படாத மற்றும் தானாக திரும்ப பெறப்பட்ட பத்திரங்களுக்கு, இந்த நடைமுறை பொருந்தாது. அங்கீகாரமில்லாத மனை தொடர்பான பத்திரங்களுக்கும், இந்த நடைமுறை பொருந்தாது. இந்த புதிய நடைமுறைகளை மாவட்ட பதிவாளர்கள் கடைபிடிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது



Post a Comment

0 Comments