RRB ALP Recruitment 2025: ரயில்வே தேர்வு வாரியம் (Railway Recruitment Board - RRB) பல்வேறு ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot - ALP) பணிக்கான தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை தொடங்கியுள்ளது.
RRB ALP Recruitment 2025: 9,970 காலிப்பணியிடங்கள்
15 ரயில்வே மண்டலங்களில் மொத்தம் 9 ஆயிரத்து 970 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இந்த பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வுக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க மே 12ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் எந்தெந்த ரயில்வே மண்டலங்களில் எவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வதும் அவசியமாகிறது.
RRB ALP Recruitment 2025: எந்தெந்த மண்டலங்களில் எவ்வளவு பணியிடங்கள்?
மத்திய ரயில்வே - 376 பணியிடங்கள், கிழக்கு ரயில்வே - 868 பணியிடங்கள், தெற்கு ரயில்வே - 510 பணியிடங்கள், மேற்கு ரயில்வே - 885 பணியிடங்கள்,
தென் கிழக்கு ரயில்வே - 921 பணியிடங்கள், வடக்கு ரயில்வே - 521 பணியிடங்கள், வடகிழக்கு எல்லைப்புறம் - 125 பணியிடங்கள், கிழக்கு மத்திய ரயில்வே - 700 பணியிடங்கள், வட மத்திய ரயில்வே - 508 பணியிடங்கள், மேற்கு மத்திய ரயில்வே - 759 பணியிடங்கள், தென் கிழக்கு மத்திய - 568 பணியிடங்கள், தென் மத்திய ரயில்வே - 989 பணியிடங்கள், வட கிழக்கு ரயில்வே - 100 பணியிடங்கள், வடமேற்கு ரயில்வே - 679 பணியிடங்கள்,
மெட்ரோ ரயில்வே கொல்கத்தா - 225 பணியிடங்கள் என மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை - 9,970 ஆக உள்ளது.
RRB ALP Recruitment 2025: விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, பணிக்கு தொடர்புடைய ITI சான்றிதழ் பெற்றிருக்கலாம். 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பொறியியல் படிப்பில் 3 வருட டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேபோல், பொறியியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் கூட விண்ணப்பிக்கலாம்.
RRB ALP Recruitment 2025: வயது வரம்பு
இந்தியன் ரயில்வேயின் உதவி லோகோ பைலட் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க 18 வயதினர் முதல் 30 வயதினர் வரை விண்ணப்பிக்கலாம். அதாவது 2025ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி கணக்கின்படி... இதில் பட்டியல் சமூகம்/பட்டியல் பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்கள் 35 வயது வரையும், ஓபிசி பிரிவினர் 33 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
RRB ALP Recruitment 2025: விண்ணப்பக் கட்டணம்
பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பத்தை பெற ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் முதல் கட்ட கணினி வழியான தேர்வில் பங்கேற்றால் ரூ.400 திருப்பிச் செலுத்தப்படும். பட்டியல் சமூகத்தினர், பட்டியல் பழங்குடியினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் பிரிவினர் விண்ணப்பத்திற்கு ரூ.250 செலுத்த வேண்டும். முதல் கட்ட கணினி வழியான தேர்வில் பங்கேற்றால் இந்த தொகை முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும்.
RRB ALP Recruitment 2025: தேர்வுகள் நடைபெறும் முறை
உதவி லோகோ பைலட் பதவிக்கான தேர்வுகள் மூன்று கட்டமாக நடைபெறும். அதில் முதல் இரண்டு கட்டங்களும் கணனி வழியான தேர்வுகள் (CBT). கடைசியாக சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ உடற்பயிற்சி சோதனை இருக்கும்.
RRB ALP Recruitment 2025: தேர்வுகள் எப்படி இருக்கும்?
முதல் கட்ட கணினி வழியான தேர்வில் (CBT 1), 75 மல்டி-சாய்ஸ் கேள்விகள் கொடுக்கப்படும். அதனை நிரப்புவதற்கு 60 நிமிடங்கள் கொடுக்கப்படும். இரண்டாம் கட்ட கணினி வழியான தேர்வு (CBT 2) இரண்டு பிரிவாக நடைபெறும்.
CBT 2 தேர்வின் முதல் பிரிவில், 100 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு 90 நிமிடங்களில் நீங்கள் பதிலளிக்க வேண்டும். இரண்டாவது பிரிவில், வணிகம் சார்ந்த பாடங்களில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்படும். இதப்ரு பதிலளிக்க 60 நிமிடங்கள் கொடுக்கப்படும். இந்த CBT 1, CBT 2 தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும், கால் மதிப்பெண் மைனஸ் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
RRB ALP Recruitment 2025: விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
விண்ணப்பதாரர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதாவது, ஆதாரில் உள்ள விவரங்களும், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் இடம்பெற்றுள்ள விவரங்களும் ஒன்றாக இருப்பதை உறுதிசெய்யவும். பெயர் அல்லது பிறந்த தேதியில் முரண்பாடுகள் ஏற்பட்டால் ஆவண சரிபார்ப்பு கட்டத்தின் போது தாமதங்களுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments