தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை ஒன்றிய அரசு ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், மாநில அரசு ரூ.60 ஆயிரமும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிதி ஏழை எளிய மக்களுக்கு போதுமானதாக இல்லாத காரணத்தால் முதல்வர், நடப்பாண்டு முதல், மாநில அரசின் மானியத்தை ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி, ஒரு வீட்டிற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள 74 ஆயிரத்து 597 அடுக்குமாடி குடியிருப்புகளில், கடந்த அதிமுக ஆட்சியில், 6 ஆயிரத்து 417 குடியிருப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 56 ஆயிரத்து 299 அடுக்குமாடி குடியிருப்புகள் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
0 Comments