ஜூன் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..? ஜூலையில் ரூ.1,000 உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும்..!!

 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஜூன் 3ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

                                                                                   


தமிழ்நாடு அரசின் திட்டங்களில் மிகவும் வரவேற்பு பெற்ற திட்டம் என்றால் அது மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இந்த திட்டத்தில் தற்போது 1 கோடியே 6 லட்சம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வருகின்றனர். உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்து பெண்கள் அனைவருக்கும் 3 மாதங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்த நாளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் ஜூலையில் புதிய பயனர்களுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்காது..?


மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய்க்கு அதிகமாக வைத்திருப்பவர்கள், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோர், 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், வருமான வரி செலுத்துவோர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்க முடியாது.


அதேபோல், ஆண்டு ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர், கார், ஜீப் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.


Post a Comment

0 Comments